காலவரையற்ற உண்ணாவிரதம்: தேமுதிக எம்.எல்.ஏ. அருள்செல்வன் கைது- மருத்துவமனையில்...
மயிலாடுதுறை: ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்த மயிலாடுதுறை தேமுதிக எம்.எல்.ஏ. அருள்செல்வன் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை சட்டசபைத் தொகுதி, தேமுதிக எம்.எல்.ஏ., அருள்செல்வன். இவர், மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் மற்றும் புறவழி சாலை அமைப்பது உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 20ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

அவருடன், 50க்கும் மேற்பட்ட தே.மு.தி.க.,வினர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். அருள்செல்வனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து, மயிலாடுதுறை வணிகர்கள் கடந்த திங்களன்று மதியம் வரை, கடைகளை அடைத்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த அருள்செல்வனைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications