சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா – ஆதரவு தர நாங்க இருக்கோம்.. வாலண்டியராக வந்த திமுக!
சென்னை: தமிழக சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கக் கோரி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கட்சித்தலைவர் விஜயகாந்த் எம்.எல்.ஏக்களின் போராட்டத்தை முடித்து வைத்தார்.
சட்டப்பேரவை வளாகத்தில் வாயில் கருப்புத் துணி கட்டியபடி அவர்கள் தர்ணா போராட்டம் நடத்திய தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கு இன்றும் திமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டம் இன்று காலை தொடங்கியது. தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து சட்டப்பேரவை வளாகத்தில் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் வாயில் கருப்புத் துணை கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் மீதான நடவடிக்கையை ரத்துசெய்து மீண்டும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக உறுப்பினர்களை, திமுக சட்டப்பேரவைக்குழு துணைத் தலைவர் துரைமுருகன் நேரில் சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து தேமுதிக எம்.எல்.ஏ.,க்களுக்கு ஆதரவாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக உறுப்பினர் துரைமுருகன், தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது. தேமுதிக.,வினருக்கு உரிமை மீறல் குழு அளித்துள்ள தண்டனை மிக அதிகம். இப்படி தண்டனை கொடுப்பதற்கு பதில் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகளே இல்லை என அறிவித்து விடலாம் என தெரிவித்தார். இதனை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் ஆமோதித்தார்.

வந்தார் விஜயகாந்த்
அப்போது திடீரென சட்டசபை வளாகத்திற்கு வந்த எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், கட்சி எம்.எல்.ஏ.க்களின் போராட்டத்தை முடித்துவைத்தார்.
விஜயகாந்த் குற்றச்சாட்டு
அப்போது பேசிய விஜயகாந்த எந்த மாநிலத்திலும் நடக்காத அளவிற்கு தமிழகப்பேரவையில் கேலிக்கூத்து நடப்பதாக குற்றம்சாட்டினார்.

திமுக வாலண்டியர் ஆதரவு
கடந்த 25ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று தேமுதிக எம்.எல்ஏக்கள் கறுப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியபோதும் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications