தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக மனு
சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகும் நாளில் இருந்தே பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் கருத்துக்கணிப்புகள் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் தேமுதிக வலியுறுத்தியுள்ளது
இதுதொடர்பாக தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் காலத்தில், தேர்தல் கணிப்புகள் வெளியிட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்-1951, 126-வது பிரிவின்படி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சில பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் தேர்தல் கணிப்பு என்ற பெயரில், எந்தத் தொகுதியில் யார் வெற்றி பெறுவார், யார் தோல்வியடைவார், எந்த கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்ற வகையிலான செய்திகளை வெளியிடுகின்றனர். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குற்றமாகும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், நிர்வாகம் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது. தற்போது, பல்வேறு ஊடகங்கள் தங்களுக்கு ஆதரவான கட்சிகள் குறித்து மக்களிடம் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை திணித்து வருகின்றனர்.
வாக்காளர்களை குழப்பும் வகையில் கருத்துக் கணிப்புகளை வெளியிடுவோர் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
எனவே, தமிழகத்தில் கருத்துக் கணிப்புகளை வெளியிடும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications