நாங்க தேமுதிக... அவங்க மக்கள் நலக் கூட்டணி.. "பங்காளி" மட்டும்தான்.. "கூட்டாளி"கள் அல்ல!
சென்னை: மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக தேர்தல் உடன்பாடு கொண்டிருந்தாலும் கூட இருவரும் தத்தமது பெயர்களிலையே தொடர்ந்து தனித்து இயங்கவுள்ளனர்.
இது கூட்டணி அல்ல. வெறும் தொகுதிப் பங்கீடும், உடன்பாடும் மட்டுமே. நீ இவ்வளவு தொகுதிகளில் போட்டியிட்டுக்கோ, நாங்க இதில் நின்று கொள்கிறோம். மற்றபடி நமக்குள் எந்தக் கூட்டணியும் கிடையாது, கொள்கையும் கிடையாது. தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையைப் பார்த்தால் நமக்கு இப்படித்தான் தோன்றுகிறது.
தேமுதிக- மநகூ கூட்டணி ஒப்பந்தம் #DMDK #MNK pic.twitter.com/6c8QgUWDYO
— Oneindia Tamil (@thatsTamil) March 23, 2016
தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த ஒரு இடத்திலும் கூட்டணி அமைத்து, கூட்டு சேர்ந்து என்று எந்த வார்த்தையும் இடம் பெறவில்லை.
டைரக்டாக தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் என்று போட்டு விட்டார்கள். மேலும் தேமுதிக இத்தனை இடங்களில் போட்டியிடும், மக்கள் நலக் கூட்டணி இத்தனை இடங்களில் போட்டியிடும் என்றும் தேமுதிக கூறியுள்ளது. இதனால் இவர்கள் ஒரே கூட்டணியாகப் போட்டியிடவில்லை.
இதன் மூலம் இது கூட்டணி அல்ல என்பதை தேமுதிக தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இவர்கள் கூட்டாக பிரசாரம் செய்வார்களா, கூட்டணியாக தேர்தல் அறிக்கை வெளியிடுவார்களா என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
இப்படி ஒரு வித்தியாசமான, வினோதமான தேர்தல் பங்காளிகளை, தமிழக தேர்தல் களம் இதற்கு முன்பு சந்தித்ததாக நமக்கு நினைவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications