'சிங்கம்' சிங்கிளா நிக்க வேண்டியதுதானே.... பாமகவை கிண்டலடிக்கும் தேமுதிகவினர்!
சென்னை: சிங்கங்கள் சிறு நரியிடம் பிச்சை கேட்காது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதை வைத்து இப்போது பாமகவினரைப் பார்த்து தேமுதிகவினர் கிண்டலடிக்க ஆரம்பித்துள்ளனராம்.
ஏற்கனவே நொந்து போயுள்ள பாமகவினர், தேமுதிகவினரின் இந்தக் கிண்டலால் மேலும் எரிச்சலாகியுள்ளனராம்.
அவர்தானே சிங்கம் என்கிறார். பிறகெதற்கு கூட்டணிக்கு விரும்புகிறார். தனியாக போய் நிற்க வேண்டியதுதானே என்று நக்கல் விட்டு வருகின்றனராம் தேமுதிகவினர்.

தொகுதிப் பங்கீட்டில் முட்டல் மோதல்
தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாமக, தேமுதிக இடையேதான் பெரும் பிரச்சினை நிலவுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டுவதிலும், விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருப்பதிலும், சளைக்காமல் செயல்படுகின்றனர்.

நடுவில் சிக்கி சட்னியான பிற கட்சிகள்
இவர்களின் மோதலால் பாஜக உள்பட கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்ற கட்சிகள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பிச்சை போடுவது போல
இந்த இரு கட்சிகளும் தாங்கள் எடுத்துக் கொண்டது போக மீதமுள்ள தொகுதிகள்தான் உங்களுக்கு என்பது போல நடந்து கொள்வதாக பாஜக உள்பட அனைத்துக் கட்சிகளுமே புலம்புகின்றனவாம்.

சேலம் - கள்ளக்குறிச்சியால் மோதல்
சேலம், கள்ளக்குறிச்சி தொகுதி தொடர்பாக தற்போது மோதல் உக்கிரமாகியுள்ளது. இதில் சேலம் தொகுதியில் தேமுதிக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை விட்டுத் தர முடியாது என்று கூறி விட்டார் ராமதாஸ். அதேபோல கள்ளக்குறிச்சிக்கும் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கி வைத்து விட்டார்.

சுதீஷுக்கு இல்லாமலா... தேமுதிக டென்ஷன்
இதனால் தேமுதிக கடுப்பாகியுள்ளது. சேலம் அல்லது கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷை நிறுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் ராமதாஸ் இப்படி இடையில் புகுந்து டயரை பஞ்சராக்கி விட்டதால் தேமுகிகவினர் ஆத்திரமடைந்துள்ளனர்.

சிங்கம் பிச்சை கேட்காது
இந்த நிலையில் தர்மபுரியில் அன்புமணியை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், சிங்கக் குட்டிகள் சிறுநரியிடம் போய் பிச்சை கேட்பதா? என்று பேசியிருந்தார். இதை வைத்து இப்போது தேமுதிகவினர் கடுப்பு கலந்த நக்கலையும், நையாண்டியையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.

அப்ப சிங்கிளா போக வேண்டியதுதானே...
சிங்கம் என்றால் பா.ம.க. சிங்கிளாக நிற்க வேண்டியது தானே தேமுதிகவினர் கிண்டலடிக்கிறார்களாம். இதைக் கேட்டு பாமக தரப்பு மேலும் உஷ்ணமாகியுள்ளதாம்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications