கிருஷ்ணகிரியிலிருந்து.... விஜயகாந்தின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் துவக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தினை வரும் 18-ந் தேதி கிருஷ்ணகிரியில் இருந்து துவங்குகின்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி- தமாகாவுடன் கை கோர்த்துள்ளது தேமுதிக. தேமுதிக மட்டும் 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தேர்தலுக்கான முதல் கட்ட பிரசாரத்தை கும்மிடிப்பூண்டியில் இருந்து தொடங்கினார் விஜயகாந்த்.

DMDK's 2nd phase election campaign starts from Krishnagiri

தற்போது விஜயகாந்தின் 2-வது கட்ட பிரசார பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

18 ஆம் தேதி கிருஷ்ணகிரி - ஓசூர், தருமபுரி, 19 ஆம் தேதி சேலம் கிழக்கு - ஏற்காடு, சேலம் மேற்கு, ஓமலூர், 20 ஆம் தேதி நாமக்கல், கரூர்-குளித்தலை, 21 ஆம் தேதி ஈரோடு தெற்கு - ஈரோடு(கிழக்கு), ஈரோடு வடக்கு - அந்தியூர், 22 ஆம் தேதி திருப்பூர் வடக்கு- காங்கேயம், திருப்பூர் தெற்கு - உடுமலைப்பேட்டை, 23 ஆம் தேதி நீலகிரி-குன்னூர், கோவை வடக்கு, கோவை தெற்கு- சூளூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கின்றார்.

24 ஆம் தேதியன்று திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு, வேடசந்தூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதே தினத்தில் மதுரையிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் விஜயகாந்த்.

25 ஆம் தேதியன்று தேனி ஆண்டிப்பட்டியிலும், மதுரை மேற்கு- திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தேமுதிக, தாமக, மநகூ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+