கேப்டனின் டூ இன் ஒன் ப்ளான்... நேர்காணலோடு, கூட்டணி குறித்தும் வேட்பாளர்களுடன் ஆலோசனை
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்துள்ளவர்களிடம் தேமுதிக இன்று நேர்காணலைத் தொடங்கியுள்ளது. இந்த நேர்காணலின் போதே, கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்படும் என தேமுதிகத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள கட்சிகள், கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேமுதிக சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் தேமுதிக இன்று நேர்காணலைத் தொடங்கியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில், சென்னை கோயம்பேட்டிலுள்ள தலைமை கழகத்தில் மார்ச் 1ம் தேதி வரை இந்த நேர்காணல் நடைபெறுகிறது.

முன்னதாக நேற்று முன்தினம் நடந்த காஞ்சிபுரம் மாநாட்டின்போது கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேட்பாளர் நேர்காணலின்போது கட்சியினரிடம் கூட்டணி குறித்து கேட்டு பிறகு கருத்தை சொல்கிறேன் என்று கூறிவிட்டார்.
இதனால், இன்றைய நேர்காணலின் போது விருப்பமனுத் தாக்கல் செய்தவர்களிடம் கூட்டணி குறித்தும் விஜயகாந்த் கருத்துக் கேட்க இருக்கிறார்.
கீழ்க்கண்ட அட்டவணைப்படி குறிப்பிட்ட தேதிகளில், கீழ்க்கண்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும் என தேமுதிக அறிவித்துள்ளது.

பிப்ரவரி 22 திங்கள்கிழமை -திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி
23ம் தேதி பிப்ரவரி 23 செவ்வாய்கிழமை -தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம்
பிப்ரவரி 24 புதன்கிழமை - மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை
பிப்ரவரி 25 வியாழக்கிழமை - சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், மேற்கு சென்னை
பிப்ரவரி 26 வெள்ளிக்கிழமை - கோயம்புத்தூர்,திருப்பூர், ஈரோடு
பிப்ரவரி 27 சனிக்கிழமை - நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம் பிப்ரவரி 28 ஞாயிற்றுக்கிழமை - நாமக்கல், சேலம், கடலூர்
29ம் தேதி பிப்ரவரி 29 திங்கள்கிழமை - திருச்சிராப்பள்ளி,வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை
மார்ச் 1 செவ்வாய்கிழமை - தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், புதுச்சேரி
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications