தேமுதிக கொடி நாள்...புரட்சி தீபக் கொடியேற்றி ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய விஜயகாந்த்!
சென்னை: தேமுதிகவின் கொடி நாளையொட்டி, சென்னை கோயம்பேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், புரட்சித்தீபக் கொடியை ஏற்றி, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தேமுதிகவின் கொடி நாள் இன்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், புரட்சித்தீபக் கொடியை ஏற்றினார்.

பின்னர் தொண்டர்கள் அனைவருக்கும் அவர் இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கழக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் ப.பார்த்தசாரதி எம்.எல்.ஏ, கழக கொள்கை பரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் எம்.எல்.ஏ, கழக துணை செயலாளர்கள் ஆர்.உமாநாத், என்.ஜாகீர் உசேன், கழக ஆசிரியர்கள் - பட்டதாரிகள் அணி செயலாளர் பேராசிரியர் ஜே.கா.ரவீந்திரன், கழக இளைஞர் அணி துணைச்செயலாளர் கு.நல்லதம்பி எம்.எல்.ஏ, மத்திய சென்னை மாவட்ட கழக செயலாளர் க.செந்தாமரைக்கண்ணன், தென் சென்னை மாவட்ட கழக செயலாளர் வி.என்.ராஜன், வட சென்னை மாவட்ட கழக செயலாளர் வி.யுவராஜ், மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம்.காமராஜ் மற்றும் பகுதி, வட்டம், கிளை கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications