விஜயகாந்த் பிரசாரம் செய்வது தேமுதிகவுக்கு 'விளையாட்டா'ப் போச்சு போல..!
சென்னை: தேமுதிகவை கிண்டலடிப்பது போலவே எழுதுகிறீர்களே என்று நிறையப் பேர் விசனப்படுகிறார்கள். ஆனால் அவர்களே சுண்டலை எடுத்து சாப்பிடுங்க என்று கூறுவது போல நடந்து கொண்டால் என்ன செய்வது.. அப்படி ஒரு மேட்டர்தான் இது...
தேமுதிக இணையதளத்தில் ஏதாவது இருக்கிறதா என்று ஒரு விசிட் அடித்தோம்.
பரவாயில்லை. நன்றாகவே இருக்கிறது. முன்பை விட இப்போது லேட்டஸ்ட் கட்சி செய்திகளையும், புகைப்படங்ளையும் வேகமாகவே அப்டேட் செய்கிறார்கள்.

என்டர் தி சைட்...!
இணையதளத்திற்குள் நுழைந்ததுமே, நம்மை விஜயகாந்த் பெருவிரலை உயர்த்தி, புன்னகை பூக்கும் முகத்துடன் வரவேற்கிறார். கூடவே 2016 நமது லட்சியம், அதை வெல்வது நிச்சயம் என்ற பன்ச் வாசகங்களும் பளிச்சிடுகின்றன.

உள்ளே வந்தாச்சா!
அடுத்து உள்ளே போகிறோம். அங்கு போய்ப் பார்த்தால், டிக்கர் ஓடுகிறது.. சைடில் கேப்டன் டிவியில் யாரோ செய்தி வாசிக்கிறார்கள்... சைடில் கீழே பார்த்தால், லேட்டஸ்ட் கமெண்ட் எல்லாம் போட்டிருக்கிறார்கள்.

'லெப்ட்'டில் திரும்பிப் பார்த்தால்...!
அப்படியே இணையதளத்தின் இடது புறம் பாருங்கள்.. ரீசன்ட் கமென்ட்ஸ் என்று ஒரு டிக்கர் ஓடிக் கொண்டிருக்கும்.. அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு...

'ரீசன்ட் கேம்ஸ்'... அப்படின்னா...??
அதுக்குக் கீழே பார்த்தால்.. கொஞ்சம் கீழே வாங்க.. வந்தீங்களா...கருப்பு பேக்கிரவுண்டில், மஞ்சள் கலரில் ரீசன்ட் கேம்ஸ் என்று ஒரு வாசகம் வருகிறது... அங்கதாங்க சந்தேகம் வந்தது.

விஜயகாந்த் பேசுவது விளையாட்டாப் போச்சா...??
இந்த ரீசன்ட் கேம்ஸ் என்ற தலைப்புக்குக் கீழ் விஜயகாந்த் டெல்லியில் நடந்த பிரசாரத்தி்ல பேசியது, அவரது முக்கியமான அறிக்கைகள் உள்பட பலவற்றைப் போட்டு வைத்து, இணைப்பும் கொடுத்துள்ளனர். ஒரு வேளை விஜயகாந்த் பேசுவதும், எழுதுவதும், பிரசாரம் செய்வதும் விளையாட்டுத்தனமாக தேமுதிக நினைக்கிறதோ...
தப்பு என் மேல இல்லீங்க.. 'கேம்ஸ்' என்பதற்கு என்ன அர்த்தம்னு தெரியலீங்க.. அவ்வளவுதாங்க!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications