ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாரதிய ஜனதா வேட்பாளருக்கு தே.மு.தி.க. ஆதரவு
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சுப்பிரமணியத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக தே.மு.தி.க. அறிவித்துள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் என்று கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் என்று அறிவித்தார். ஆனால் எந்த கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். திருச்சியை சேர்ந்த கட்சியின் மாநில துணைத்தலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு தேசிய ஜனநாய கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார். ஆனால் இதுபற்றி அந்த கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் விஜயராஜன் பா.ஜ.க. வேட்பாளர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியத்தை இன்று நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயராஜன், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் போட்டியிடுகிறார். தே.மு.தி.க. வேட்பாளர் இந்த தொகுதியில் போட்டியிட்டால் எப்படி அவரது வெற்றிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போமோ, அதே போல் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றிக்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவோம். இதில் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை.
பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 6 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்களுக்கு மாதத்திற்கு ரூ.1500 வரை மிச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல சாதனை திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருவதால் மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு பெருகி வருகிறது.
தமிழகத்தை பொருத்தவரை ஊழல்கள் பெருகிய வண்ணம் உள்ளது. இது போன்ற நிலையை மாற்றுவதற்கு ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் வெற்றி ஒரு அடித்தளமாக அமையும். இந்த தேர்தலின் வெற்றி வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றிக்கு முதல்படியாக அமையும்.
எனவே இந்த தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுப்பிரமணியத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய பாடுபடுவோம் என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications