தனித்துப் போட்டியிட்டால் தேமுதிக சிதறிப் போகும்... திமுக காசி முத்துமாணிக்கம் எச்சரிக்கை
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் எதிர்காலத்தையே இழக்க வேண்டி வரும் என்று திமுக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
சென்னையில், மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி தென்பழனி நகரில் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு கே.வி.சண்முகம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.

இதை துவங்கி வைத்து பேசிய அவர், "விஜயகாந்தின் தே.மு.தி.க என்ற நதியை தி.மு.க எனும் கடல் அழைத்தது. கடலில் எல்லா நதிகளும் இணைவதில்லை. அதே நேரத்தில் நதி வரவில்லை என்பதற்காக கடல் வற்றிப்போனதாக வரலாறு இல்லை.
பழம் பாலிலும் விழலாம். பூஜையிலும் சேரலாம். உணவாகவும் மாறலாம். யாரும் சீண்டப்படாமல் அழுகியும் போகலாம். அதே நேரத்தில் பழம் விழுந்த பாலைத்தான் சாப்பிடுவேன் என்று எந்த குழந்தையும் அடம் பிடிப்பதில்லை.
எனவே இந்த தேர்தலில் தே.மு.தி.க. இல்லாவிட்டாலும் தி.மு.க. வெற்றி பெறும். தே.மு.தி.க.வுக்கு இனி எதிர்காலம் இருப்பதாக தெரியவில்லை. இனிமேல் அக்கட்சி சீண்டுவார் இன்றி சிதறும்" என்று தெரிவித்தார்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications