2வது 'களையெடுப்பு' லிஸ்ட் ரெடி.. கடும் கலக்கத்தில் திமுக புள்ளிகள்!!
சென்னை: திமுகவில் களை எடுப்பு கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. முதல் கட்டமாக 33 நிர்வாகிகள் சஸ்பென்ட் செய்யப்பட்டாலும் மேலும் ஒரு பட்டியல் விரைவில் வெளியாகும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து கட்சியை சீரமைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு 150 பக்க பரிந்துரையை அளித்தது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில் திமுக மாவட்டங்கள் 65 ஆக பிரிக்கப்பட்டன. திமுகவில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிக் கொண்டிருக்கும் மாவட்ட செயலர்களுக்கு இது பயங்கர அதிர்ச்சியைக் கொடுத்தது.

33 பேர் அதிரடி சஸ்பென்ட்
அடுத்த கட்டமாக தஞ்சாவூர் மாவட்ட செயலராக இருந்த பழனி மாணிக்கம், தருமபுரி மாவட்ட பெருந்தலைகளான முல்லைவேந்தன், இன்பசேகரன், சேலம் பாப்பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்ட 33 நிர்வாகிகளை அதிரடியாக திமுக தலைமை சஸ்பென்ட் செய்தது.

அழகிரி ஆதரவாளர்களும்..
அத்துடன் அழகிரி அணிக்குப் போன கே.பி. ராமலிங்கம் எம்.பி., விருதுநகர் போஸ் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டனர்.

ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் மீது மட்டுமா?
அதே நேரத்தில் இந்த பட்டியலே பாரபட்சமானது என்ற புகாரும் எழத் தொடங்கியுள்ளது. தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் ஸ்டாலின் எதிர் அணியினர்தான்; ஸ்டாலின் அணியைச் சேர்ந்த ஒருவரைக் கூட ஏன் நீக்கவில்லை என்பது எதிர்ப்பாளர்களின் கேள்வி.

வடமாவட்ட களை எடுப்பு இல்லையே..
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் ஏன் இந்த களையெடுப்பு நடைபெறவில்லை என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

துரைமுருகன்?
மேலும் வேலூரில் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு எதிராக பகிரங்கமாக வேலை பார்த்த திமுக துணைப் பொதுச்செயலர் துரைமுருகன் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கிளைக்கழகங்களிலும்
அத்துடன் கிளைக் கழகங்கள் வரையிலுமே களை எடுப்பு நடைபெற்றால்தான் கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு கிலி ஏற்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

2வது லிஸ்ட் வருது..
இந்த நிலையில்தான் விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருக்கும் ஸ்டாலின் ஆதரவு 'தலைகள்" சிலரை உள்ளடக்கிய இன்னொரு சஸ்பென்ட் பட்டியலும் விரைவில் வெளிவர இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications