கூட்டணி கட்சிக்கு கடையநல்லூர் ஒதுக்கீடு...அதிருப்தியில் அதிமுக, திமுக தொண்டர்கள்
தென்காசி: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியும் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதால் அதிமுக, திமுக தொண்டர்கள் அதிருப்தில் உள்ளனர்.
தமிழக சட்டசபைக்கு மூன்று அமைச்சர்களையும், ஒரு அரசு கொறடாவையும் கொடுத்த பெருமைக்குரியது கடையநல்லூர் சட்டசபை தொகுதி. அதே நேரத்தில் அதிமுகவும், திமுகவும் இந்த தொகுதியில் நேரடியாக பலமுறை மோதியுள்ளன.

வருகிற சட்டசபை தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் சுமார் 300க்கும் மேற்பட்டோரும் ,திமுக சார்பில் 50க்கும் மேற்பட்டோரும் விருப்ப மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காதர் மொகிதீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் அதிமுகவில் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்த்து இருந்த திமுக, அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கடையநல்லூர் தொகுதியில் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூது போட்டியிடுகிறார். அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது மட்டுமே அதிமுகவினருக்கு சற்று ஆறுதலான செய்தி.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications