திமுகவும் தனித்துப் போட்டி, அதிமுகவும் தனித்துப் போட்டி.. வரலாற்றிலேயே முதல் முறையாக..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக தைரியமாக லோக்சபா தேர்தலை தனித்து சந்திக்க கிளம்பி விட்டனர் அதிமுகவும், திமுகவும்.

இவர்கள் இருவருமே இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் தைரியமாக தனித்துப் போட்டியிட்டதில்லை. குறிப்பாக சட்டசபைத் தேர்தல், லோக்சபா தேர்தல்களில். ஆனால் சமீப காலமாக அதிமுக தனித்தே போய் வர ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் தனித்து நடை போட கிளம்பியிருப்பது பெரும் ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளது.

இவர்களின் முதுகுகளில் மாறி மாறி ஓசி சவாரி ஏறியே பழக்கப்பட்ட கட்சிகளுக்கு இவர்களின் முடிவு பெரும் அசவுகரியமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதன் விளைவு.. என்னவாக இருக்கும் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எல்லாமே கூட்டாஞ்சோறுதான்

எல்லாமே கூட்டாஞ்சோறுதான்

தமிழக அரசியலைப் பொறுத்தவரை எல்லாமே கூட்டணிதான். பெரும்பாலும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிதான் இங்கு அமைவது வழக்கம். தேசிய அரசியலைப் போல தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி இங்கு அமைவதில்லை. இதுவரை ஏற்பட்டதும் இல்லை.

திமுக அல்லது அதிமுக

திமுக அல்லது அதிமுக

தமிழக அரசியலைப் பொறுத்தவரை திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளில் ஒன்றின் தலைமையின் கீழ்தான் பொதுவாக கூட்டணி அமையும்.

காங்கிரஸைத் தூக்கிப் போட்ட திமுக

காங்கிரஸைத் தூக்கிப் போட்ட திமுக

ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சியை தூக்கிப் போட்டு விட்டது திமுக. அதேபோல அதிமுகவும் கூட்டணி அமைக்காமல் தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டது.

15 சதவீத ஓட்டு

15 சதவீத ஓட்டு

காங்கிரஸ் கட்சி வசம் 15 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தவில்லை திமுக. காங்கிரஸ் மீது தமிழகத்தில் அளவுக்கு அதிகமாகவே வெறுப்புணர்வு நிலவுவதால் காங்கிரஸை தொங்க வேண்டிய அவசியம் இருப்பதாக திமுக கருதவில்லை என்று தெரிகிறது.

2009ல் நடந்த தேர்தலில்

2009ல் நடந்த தேர்தலில்

ஆனால் இதே காங்கிரஸுக்கு எதிராக நிலவி வந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான், இலங்கையில் தமிழர்கள் லட்சம் லட்சமாக கொன்று குவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸுடன் கை குலுக்கியபடி லோக்சபா தேர்தலை 2009ல் சந்தித்தது திமுக. அப்போது இக்கூட்டணிக்கு 27 இடங்கள் கிடைத்தன.

ஆனால் இப்ப நிலைமை வேறு

ஆனால் இப்ப நிலைமை வேறு

ஆனால் தற்போது ஸ்பெக்ட்ரம், தயாளு அம்மாளிடம் விசாரணை உள்ளிட்ட காரணங்களுக்காக திமுக தனது கூட்டணியை மாற்றி விட்டதாக பொதுவான கருத்து எழுந்துள்ளது.

ஆரம்பத்திலிருந்த அதிமுக தனிதான்

ஆரம்பத்திலிருந்த அதிமுக தனிதான்

மறுபக்கம் அதிமுக கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தனித்துப் போட்டியிட ஆரம்பித்து விட்டது. இடைத் தேர்தல்களில் அது தனித்தே போட்டியிட்டது. கூட்டணிக் கட்சிகளையே அது கண்டு கொள்வதில்லை என்று கூறுவார்கள். இப்போது லோக்சபா தேர்தலிலும் தனியாக போட்டியிடுகிறது அதிமுக.

சீட் குறையுமா.. வாக்குப் பிரிவதால்

சீட் குறையுமா.. வாக்குப் பிரிவதால்

இப்படி இரு பெரிய கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதால், அவர்கள் இதுவரை சார்ந்திருந்த கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் நிச்சயம் அவர்களுக்குக் கிடைக்காது. எனவே திமுக, அதிமுகவால் பெரிய அளவில் சீட்களைப் பெற முடியுமா என்ற சந்தேகமும், கேள்விகளும் எழுந்துள்ளன.

மின்வெட்டை வைத்து சமாளிக்கலாம்.. திமுக நம்பிக்கை

மின்வெட்டை வைத்து சமாளிக்கலாம்.. திமுக நம்பிக்கை

திமுகவைப் பொறுத்தவரை மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வைத்து அதிமுகவுக்கு எதிராக தீவிரப் பிரசாரம் செய்து வெற்றியைத் தொடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளதாக தெரிகிறது.

திட்டங்களைக் காட்டி வெல்ல அதிமுக முனைப்பு

திட்டங்களைக் காட்டி வெல்ல அதிமுக முனைப்பு

மறுபக்கம், இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அம்மா உணவகம் உள்ளிட்ட திட்டங்கள் ஆகியவற்றைச் சொல்லியே வெற்றி பெற்று விடலாம் என்று அதிமுக கருதுவதாக தெரிகிறது. மின்வெட்டு வாக்கு வங்கியை பெரிய அளவில் பாதிக்காது என்ற நம்பிக்கையிலும் அதிமுக இருப்பதாக கூறுகிறார்கள்.

91ல் நடந்தது என்ன...

91ல் நடந்தது என்ன...

1991ம் ஆண்டு அதிமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ராஜீவ் காந்தி படுகொலை காரணமாக அப்போது திமுகவுக்கு எதிராக பயங்கர அலை வீசியது. இதனால் தமிழகம், புதுவையில் 40 லோக்சபா தொகுதிகளிலும் அதிமுக காங்கிரஸ் கூட்டணி வென்றது.

96ல் நடந்தது...

96ல் நடந்தது...

அதேசமயம், 1996ல் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப் போனது. அப்போது நடந்த லோக்சபா தேர்தலின்போது அதிமுகவுக்கு எதிராக மக்கள் அலை வீசியது. மேலும் காங்கிரஸும் உடைந்து போனது. தமாகா உருவாகியிருந்தது. திமுக, தமாக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதாவது 40 சீட்களையும் இவர்கள் கைப்பற்றினர்.

98ல் ஒரு கூட்டணி..99ல் வேறு கூட்டணி

98ல் ஒரு கூட்டணி..99ல் வேறு கூட்டணி

1998ம் ஆண்டு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால் அதே அதிமுகவால் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது ஒரே வருடத்தில் .இதனால் 1990ல் இடைத் தேர்தல் வந்தது. அப்போது திமுகவுடன் போய்ச் சேர்ந்தது பாஜக. தமிழகத்தில் பெரும் வெற்றி கிடைத்தது திமுக, பாஜக கூட்டணிக்கு.

2004ல் மீிண்டும் அதிமுகவுக்கு அடி

2004ல் மீிண்டும் அதிமுகவுக்கு அடி

அதேபோல 2004ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது அதிமுகவுக்கு பெரும் அடி விழுந்தது. அரசு ஊழியர்கள் மீதான கடும் நடவடிக்கை உள்ளிட்டவை காரணமாக மக்கள் அப்படியே தங்களது வாக்குகளை திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றிப் போட்டு விட்டனர்.

2014ல் என்ன நடக்கும்

2014ல் என்ன நடக்கும்

இப்படி கூட்டணிகளால்தான் தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக மிகப் பெரிய வெற்றியை இதுவரை பெற்று வந்துள்ளன. ஆனால் முதல் முறையாக இரு கட்சிகளும் தனித்துப் போட்டி - அதாவது இப்போது கூட இருக்கிற சில கட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு - போட்டியிடுவது என்ற முடிவுக்கு வந்திருப்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுவே முதல் முறை...

இதுவே முதல் முறை...

திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் ஒரே நேரத்தில், ஒரே தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது இதுவே முதல் முறை என்பதால் என்ன நடக்கப் போகிறது என்ற பேரார்வம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+