ஓவர் டூ கிள்ளியூர், விளவங்கோடு.. இங்கும் திமுக, அதிமுக ஒரு முறை கூட ஜெயித்ததில்லை பாஸ்!
சென்னை: கர்நாடக மாநில எல்லைப் பகுதியையொட்டியுள்ள ஓசூர் தொகுதியில் ஒருமுறை கூட திமுக, அதிமுக ஜெயித்ததில்லை. அதேபோல கேரள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளிலும் இதுவரை திமுக, அதிமுக வெற்றி பெற்றதில்லை.
கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளை காங்கிரஸ், தமாகா, பாஜக, சிபிஎம் கட்சிகளே இதுவரை வென்றுள்ளன. அங்கு ஒருமுறை கூட திமுக, அதிமுக வெற்றிக் கனியைச் சுவைத்ததில்லை.
இந்த சுவாரஸ்யமான விவரத்தை விரிவாகப் பார்க்கலாம்.

விளவங்கோடு சிபிஎம் - காங்கிரஸ்
விளவங்கோடு தொகுதியை சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறிக் கைப்பற்றி வந்துள்ளன. அங்கு 1967ல் நடந்த தேர்தலில் காங்கிரஸின் ஆர்.பி. நாடார் வெற்றி பெற்றார்.

71 டூ 1980
71ல் என்சிஓவின் ரோணப்பன் நாடார் வென்றார். 77ல் சிபிஎம்மின் ஞானசிகாமணி வெற்றி பெற்றார். 80ல் சிபிஎம்மின் மோனி வெற்றி பெற்றார். அதே ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் சிபிஎம்மின் பாக்கியதாஸ் வெற்றி பெற்றார்.

84 டூ 2001
84ல் நடந்த தேர்தலில் காங்கிரஸின் சுந்தரதாஸ், 89ல் காங்கிரஸின் சுந்தரதாஸ், 91ல் காங்கிரஸின் சுந்தரதாஸ், 96ல் சிபிஎம்மின் மோனி, 2001ல் சிபிஎம்மின் மோனி வெற்றி பெற்றனர்.

2006 டூ 2011
2006 தேர்தலில் சிபிஎம்மின் ஜான் ஜோசப் வென்றார். 2011 தேர்தலில் காங்கிரஸின் விஜயதாரணி வெற்றி பெற்றார்.

அதிமுக 1- திமுக 4.. தோல்வி!
இங்கு அதிமுக ஒருமுறை மட்டும் போட்டியிட்டு தோல்வியுற்றது. திமுகவோ 4 முறை போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியுள்ளது.

கிள்ளியூர்
இதேபோல கிள்ளியூர் தொகுதியிலும் இதுவரை திமுக, அதிமுக வென்றதில்லை. அங்கு காங்கிரஸ், தமாகா மாறி மாறி வென்றுள்ளன.

காங்கிரஸ் 3 - தமாகா 2
இங்கு காங்கிரஸ் கட்சி 3 முறை வென்றுள்ளது. தமாகா 2 முறை வெற்றி பெற்றுள்ளது. மற்ற சமயங்களில் ஜனாத, சுயேச்சை, என்சிஓ ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.

பாஜக 4 .. திமுக 3 தோல்வி
இங்கு பாஜக 4 முறை 2வது இடம் வரை முன்னேறி வந்து தோல்வியைத் தழுவியுள்ளது. அதிமுக ஒருமுறை கூட இங்கு போட்டியிட்டதில்லை. திமுக 3 முறை இங்கு 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications