சென்னையின் இந்த சீரழிவுக்கு அதிமுகவும், திமுகவும் தான் காரணம்: அன்புமணி ராமதாஸ்
சென்னை: வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்டுள்ள சீரழிவுக்கு அதிமுகவும், திமுகவும் தான் காரணம் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பெய்த கனமழையால் சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. வெள்ளத்தால் அவதிப்படும் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை வேளச்சேரி பகுதிக்கு இன்று சென்றார்.
மல்லிகைப்பூ நகர், அருணாசலபுரம், கோவிந்தராஜபுரம், அவ்வை நகர், லட்சுமிபுரம், தரமணி, பெரியார் நகர், விஜயநகர், தேவி கருமாரியம்மன் நகர், அஷ்டலட்சுமி நகர் பகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

நிவாரணம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேளச்சேரி மக்களுக்கு அன்புமணி ராமதாஸ் அரிசி, போர்வை ஆகியவற்றை வழங்கினார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ அரிசி மூட்டையை வழங்கினார்.

அவதி
மழை கொட்டித் தீர்த்து 2 வாரம் ஆகியும் யாரும் இங்கு வந்து பார்க்கவும் இல்லை, நிவாரணமும் வழங்கவில்லை. மக்கள் குடிக்க நீர் இன்றி அல்லல்படுகிறார்கள். கடலூர் மக்களின் நிலைமை இதைவிட மோசம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

நிதி
வெள்ளத்தையொட்டி மாநில அரசு ரூ.500 கோடியும், மத்திய அரசு ரூ.940 கோடியும் முதல்கட்டமாக ஒதுக்கியுள்ளது போதாது. மாறாக மத்திய, மாநில அரசுகள் ரூ.20 ஆயிரம் கோடி நிவாரண நிதி அளிக்க வேண்டும். அதில் ரூ.5 ஆயிரம் கோடியை முதல்கட்டமாக மத்திய அரசு அளிக்க வேண்டும் என்கிறார் அன்புமணி.

அதிமுக அரசு
நிவாரண பணிகளை மேற்கொள்வதிலும் சரி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதிலும் சரி தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. இதை வைத்து நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சீரழிவுக்கு அதிமுகவும், திமுகவும் தான் காரணம் என அன்புமணி கூறியுள்ளார்.

வெட்கக்கேடு
சென்னை போன்ற பெருநகரில் மழையால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது வெட்கக்கேடான விஷயம். அதிமுகவும், திமுகவும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் அன்புமணி.

சென்னை
வெள்ளநீரில் 80 சதவீதம் கடலில் கலக்கிறது. சென்னையை சுற்றி இருக்கும் 3 ஆறுகளை தூர்வாரினாலேயே மழை வெள்ளநீர் வடிந்துவிடும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications