கோட் பிங்க்.. தாராபுரம் வாக்கு மையத்தில் திமுக அதிரிபுதிரி பிளான்.. தவெகவுக்கு செம ஷாக்

Subscribe to Oneindia Tamil

தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தாராபுரத்தில் வாக்குப்பதிவு நாளிலும் தவெக பணம், டோக்கன், பரிசு பொருட்கள் கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறின. களத்தில் தவெக வேட்பாளருககு எதிர்ப்புகள் எழுந்தன. இந்நிலையில் தாராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் திமுக பிங்க் குறியீட்டுடன் களத்தில் இறங்கியிருப்பது, தவெகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அறிவித்ததில் இருந்து தவெக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அதிமுகவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு தவெகவில் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர். தாராபுரத்தில் மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 13 பேர் சுயேச்சைகள். தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, சிபிஐ சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் சார்பில் கார்த்திகா போட்டியிடுகிறார்கள். தவெக, அதிமுக, திமுக இடையே தான் போட்டியே.

Dharapuram DMK

தாராபுரம் வாக்கு எண்ணும் மையம்

தாராபுரத்தில் 80.31 சதவீதம் வாக்கு பதிவானது. தாராபுரம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். இந்த பணியில் 80க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காலை 6.30 மணியில் இருந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு பிரதான கட்சி முகவர்கள் வருகை புரிந்தனர். திமுக முகவர்களுக்கு பிங்க் நிற நோட் மற்றும் பிங்க் நிற துண்டு கொடுக்கப்பட்டது. அனைத்து திமுக முகவர்களும் கழுத்தில் பிங்க் நிற துண்டு அணிந்து உள்ளே சென்றனர். இதை தவெக உள்ளிட்ட கட்சிகள் கண்டித்தனர். தேர்தல் அதிகாரிகள், காவல்துறையிடம் புகார் சொல்லப்பட்டது. இதனால் பிங்க் துண்டுடன் முகவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

ஆபரேஷன் பிங்க்

திமுக முகவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கட்சி துண்டு இல்லை என்று திமுகவினர் முறையிட்டனர். நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு திமுகவினர் பிங்க் துண்டுடன் அனுமதிக்கப்பட்டனர். கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கோவையில் திமுக முகவர்கள் மஞ்சள் நிற துண்டு அணிந்திருந்தனர். அதேபோல பிங்க் அடையாளத்துடன் திமுகவினர் இறங்கியுள்ளனர். இதன் காரணம் புரியாமல் தவெக உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+