கமல் எதிர்ப்பில் கை கோர்த்துக்கொண்ட திமுக-அதிமுக!
Recommended Video

சென்னை: கமல்ஹாசன் எதிர்ப்பில் திமுக மற்றும் அதிமுக இரண்டும் கை கோர்க்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது கடந்த 2 தினங்களில் நடைபெற்ற நிகழ்வுகள்.
கமல்ஹாசன் அரசியல் அறிவிப்பு மிகுந்த ஆரவாரத்திற்கு நடுவே நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாகவே கமல் நடவடிக்கைகள் பரபரப்பின் உச்சம் தொட்டன.

மதுரை, ஒத்தகடை பகுதியில் இன்று பொதுக்கூட்டத்திற்கு அழைப்புவிடுத்த கமல்ஹாசன், அங்கு கட்சிக் கொடியை அறிமுகம் செய்கிறார்.
இதையொட்டி நேற்று அவர் சென்னையில் இருந்து மதுரைக்கு கிளம்பினார். இதையடுத்து திமுக மற்றும் அதிமுக வட்டாரத்தில் தடதடப்பு ஏற்பட்டது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திடீரென தொண்டர்களுக்கு ஒரு மடல் எழுதினார். அதில் பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்.
ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா! தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள கோடித் தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக பெரும் பொறுப்புடன் கழக ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தனது நீண்ட மடலில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலடியாக கமல் அளித்த பேட்டியில், நான் பூ அல்ல விதை, விதைத்து பாருங்கள், வளருவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியில், ஸ்டாலின் சரியாகத்தான் சொல்லியுள்ளார். கமல் விதை என்கிறார். அப்படி பார்த்தாலும், அவர் மரபணு மாற்ற விதை. தமிழகத்தில் அப்படிப்பட்ட விதைக்கு இடமில்லை என்று தெரிவித்தார்.
கமலை எதிர்ப்பதில், ஸ்டாலினும், ஜெயக்குமாரும் ஒத்துப்போகிறார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது. திமுக திடீரென தங்கள் கட்சியில், இரட்டை பதவி வகிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இது கமல், ரஜினி அரசியல் வருகையால், ஏற்பட்ட பதற்றமாகவே தெரிகிறது.
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications