"தளபதி திருவிழா" .. அழகிரி பிறந்த நாளில் சென்னையில் ஸ்டாலின் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம்
சென்னை: திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் பிறந்த நாளன்று சென்னையில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக திமுகவில் இருந்து தற்காலிகமாக மு.க. அழகிரி நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் மு.க. அழகிரி

அத்துடன் தமது பிறந்த நாளான ஜனவரி 30-ந் தேதியன்று முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாகவும் அழகிரி மிரட்டிக் கொண்டு இருக்கிறார்.
இந்த களேபரங்களுக்கு மத்தியில் மு.க. அழகிரியின் பிறந்த நாளான ஜனவரி 30-ந் தேதியன்று சென்னையில் ஸ்டாலின் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் குறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள தென் சென்னை மாவட்ட திமுக செயலர் ஜெ. அன்பழகன், "தளபதி" திருவிழா என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திமுகவில் அழகிரி நீக்கப்பட்ட நிலையில் ஸ்டாலினின் கைதான் ஓங்கியுள்ளது. அழகிரி நீக்கத்துக்குப் பின்னர் நேற்று சேலத்தில் மிகப் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அதைவிட மிகப் பிரம்மாண்டமாக அதுவும் அழகிரி பிறந்த நாளன்று நடத்தப்படுவதால் ஸ்டாலின் ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கில் சென்னையில் குவிவார்கள் என தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications