திமுகவில் அதிரடி- 65 மாவட்டங்களாக பிரிப்பு! சென்னை, மதுரை, கோவை 4 மாவட்டங்களானது!!
சென்னை: திமுகவில் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக குறுநில மன்னர்களாக கோலோச்சி வந்த மாவட்ட செயலர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. திமுக நிர்வாக அமைப்பு மொத்தம் 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. திமுகவின் இந்த படுதோல்விக்கு காரணமே 25 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட செயலாளர்கள் இருப்பவர்கள்தான் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டப்பட்டது.

தற்போது மொத்தம் 35 மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவர் மீதும் நாள்தோறும் திமுக தலைமைக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் குவிந்தன. ஆனால் மாவட்ட செயலாளர்களுக்கு பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் சென்னையில் ஜூன் 2-ந் தேதி கூடிய திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் திமுகவை சீரமைக்க ஒரு குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, கலசப்பாக்கம் திருவேங்கடம், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், திருத்துறைப்பூண்டி கல்யாண சுந்தரம், ஈரோடு சச்சிதானந்தம், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு சென்னையில் கூடி விவாதித்தது. இந்தக் குழுவின் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் அன்பழகன், ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் 150 பக்க பரிந்துரை அறிக்கையை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆறு பேர் குழு அளித்தது. இதனடிப்படையில் திமுக 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
65 மாவட்டங்களானது!
சென்னை, மதுரை, கோவை ஆகியவை 4 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வடசென்னை, தென் சென்னை என்பது பிரிக்கப்பட்டு கிழக்கு சென்னை, மேற்கு சென்னை, தென் சென்னை, வடசென்னை என 4 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
வேலூர், நெல்லை, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்கள் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர், காஞ்சி, கடலூர், நாகை, தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் கிருஷ்ணகிரி, விருதுநகர், புதுக்கோட்டை,கன்னியாகுமரி, தூத்துகுடி, உள்ளிட்டவை இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றன.
பெரம்பலூர், சிவகங்கை ,நீலகிரி, திருவாரூர், கரூர், தேனி, தருமபுரி, அரியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்ட அமைப்புகள் பிரிக்கப்படவில்லை.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications