மறுபடியும் ‘என்னம்மா'... இன்று கடைசிப் பக்கத்தில்... 2வது நாளாக ஜெ.வுக்கு திமுகவின் பர்த்டே கிப்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக சார்பில் இன்றும் ஊடகங்களில் ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா' விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் திமுக சார்பில் வித்தியாசமான விளம்பரம் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.

பார்த்திருக்கீங்களா...?

பார்த்திருக்கீங்களா...?

அதாவது, இன்றைய நாளிதழ்களில் திமுக சார்பில் ஒரு பக்க விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘5 வருஷத்துல முதல்வரை ஸ்டிக்கர்ல பார்த்திருப்பீங்க, பேனர்ல பாத்திருப்பீங்க, ஏன் டிவில பார்த்திருப்பீங்க... நேர்ல பார்த்திருக்கீங்களா?' என சிங்கம் பட டயலாக் ஸ்டைலில் கூறப்பட்டிருந்தது.

பன்ச்...

பன்ச்...

கூடவே, ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா..' என்ற பன்ச்சையும் வைத்து பட்டையைக் கிளப்பியிருந்தனர்.

பதிலடி...

பதிலடி...

இதைக் கண்டு பொங்கியெழுந்த அதிமுகவினர் இதற்கு பதிலடி தரும் விதமாக அவர்களும் ஒரு விளம்பரத்தை சமூகவலைதளங்களில் பரப்பினர்.

விவாதம்...

விவாதம்...

திமுக, அதிமுகவின் இந்த அதிரடி மீம்ஸ் தாக்குதல் நேற்று சமூகவலைதளங்களில் விவாதப் பொருளாக இருந்தது. இப்படி இரண்டு கட்சிகளும் மாறி மாறி மீம்ஸ் வெளியிட்டது பரபரப்பைக் கிளப்பியது.

இன்றும் விளம்பரம்...

இன்றும் விளம்பரம்...

இந்நிலையில், நேற்றைப் போலவே இன்றும் திமுக சார்பில் இன்றும் ஒரு விளம்பரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே, ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா' ஸ்டைலில் இந்த விளம்பரமும் இடம் பெற்றுள்ளது.

எங்கும் கொள்ளை...

எங்கும் கொள்ளை...

மேலும் அதில், ‘மண் கொள்ளை, பால் கொள்ளை, மின்சாரக் கொள்ளை, ஆனா 86 லட்சம் பேருக்கு வேலையே இல்லை. நோக்கியா பாக்ச்கான் போன்ற் அநிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியதால் 75,000க்கும் அதிகமானோர் வேலையிழப்பு' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பர்த்டே கிப்ட்...

பர்த்டே கிப்ட்...

இந்த விளம்பரமும் ஜெயலலிதாவின் பிறந்தநாளிற்கு திமுகவின், நமக்கு நாமே டீமின் பிறந்தநாள் பரிசு என சமூகவலைதளப் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையும் ஹேஷ்டேக் போட்டு பிரபலப்படுத்தி வருகின்றனர் திமுகவினர்.

நூதன பிரச்சாரம்...

நூதன பிரச்சாரம்...

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக வித்தியாசமான முறையில் இந்த விளம்பரத்தை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த இந்த விளம்பரம், இன்று கடைசிப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வெயிட்டிங்...

வெயிட்டிங்...

நேற்றைப் போலவே இதற்கும் அதிமுக தரப்பில் என்ன மாதிரியான ரியாக்‌ஷன் கிடைக்கும் என சமூகவலைதளப் பக்கங்களில் மக்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.

என்னம்மா இப்டி பின்றீங்களேம்மா...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+