பிரியாணி தகராறு.. கூட்டாளிகளுடன் ஹோட்டலுக்குள் புகுந்து கேஷியரை சரமாரியாக தாக்கிய திமுக நிர்வாகி
Recommended Video

சென்னை: திமுக மாணவர் அணி நிர்வாகி யுவராஜ், சென்னை, விருகம்பாக்கத்திலுள்ள ஹோட்டலுக்குள் கூட்டாளிகளுடன் புகுந்து, ஊழியர்களை சரமாரியாக குத்தி காயப்படுத்தும் காட்சிகள் வைரலாகியுள்ளன.
கடந்த 28ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹோட்டல் பூட்டப்பட்டிருந்த நிலையில், ஷட்டரை திறக்கச் சொல்லி, உள்ளே பத்து பதினைந்து கூட்டாளிகளோடு புகுந்த யுவராஜ், சரமாரியாக கேஷியர் முகத்தில் குத்துவிடுகிறார்.
தடுக்க முற்பட்ட கடை ஊழியர்கள் முகத்திலும் குத்துகிறார். அவர் கூட்டாளிகளும் குத்துகிறார்கள்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் இப்போது வைரலாகியுள்ளன. கடை உரிமையாளர் தமிழ்ச்செல்வன் இதுபற்றி போலீசில் புகார் அளித்த நிலையில், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

உரிமையாளர் குற்றச்சாட்டு
இதுபற்றி தமிழ்ச் செல்வன் கூறுகையில், திமுகவை சேர்ந்த அந்த தம்பியும் அவர் கூட்டாளிகளும் தாக்கியதில், எனது கடை கேஷியருக்கு மூக்கில், தலையில் பல தையல்கள் போடப்பட்டுள்ளன. வியாபாரிகள் சங்கம் இந்த சம்பவத்திற்கு எதிராக எங்களுடன், இணைந்துள்ளது. போலீஸ் துணை கமிஷனர், இன்ஸ்பெக்டரும், தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். கட்சி பிரமுகர்களிடம் முறையிட்டபோது, அவர்களும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. கட்சி ரீதியாக தக்க நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளனர் என்றார்.

கடை ஊழியர் குமுறல்
கடை ஊழியர் ஒருவர் கூறுகையில், கருணாநிதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை பயன்படுத்திக்கொண்டு, இதுபோன்ற கலாட்டாவில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு ஹோட்டல் பூட்டப்பட்ட பிறகு அதை திறக்கச் சொல்லி பிரியாணி கேட்டனர். பிரியாணி இல்லை என்றபோது தாக்கினர். எப்போதுமே ஸ்கார்பியோ காரில் நண்பர்களோடு வருவதும், காரை ஹோட்டல் முன்னால் நிறுத்தி பிறருக்கு தொல்லை கொடுப்பதும், அதை நகர்த்தி விட சொன்னால் தகராறு செய்வதும் இவர்கள் வாடிக்கைதான்.

பாக்சர் போல குத்துகிறார்
"நான் லோக்கல், நான் லோக்கல்" என கூறியபடி கெத்தோடுதான் எப்போதும் வருவார். கையில் போட்டிருந்த வளையம், பிரேஸ்லெட் போன்றவற்றை வைத்துதான் எங்களை தாக்கினர். இவ்வாறு அந்த ஊழியர் தெரிவித்தார். பாக்சரை போல துள்ளி துள்ளி குதித்தபடி கேஷியர் முகத்தில் திமுக நிர்வாகி குத்தும் காட்சி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications