திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் எதிரொலி... சபாநாயகர் தனபாலின் உருவபொம்மை எரிப்பு
சென்னை: சட்டசபையில் திமுக எம்எல்ஏக்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சபாநாயகர் தனபாலின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தண்டையார்பேட்டை, திருவெற்றியூரில் சபாநாயகர் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கத்தில் சபாநாயகர் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் சபாநாயகர் தனபால் உருவபொம்மையை எரித்து 100க்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ குணசேகரன் பேசிய போது, நமக்கு நாமே என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் கோட்டையை பிடிக்கமுடியாது" என்று குறிப்பிட, அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதே நேரத்தில், மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு கருத்து தெரிவித்தார். ஆனால், அதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் தனபால் நீக்கினார்.
அதை எதிர்த்து தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடவே, அவர்களை அவையை விட்டு கூண்டோடு வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதன் பிறகு அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க. உறுப்பினர்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அது நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். மேலும், தி.மு.க உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர், இன்று அவை நடவடிக்கைகள் முடிவடைவதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விவாதத்துக்கு நாளை பதில் அளிப்பார்கள் என்றும் அறிவித்ததை அடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
சட்டசபையில் திமுக எம்எல்ஏக்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சபாநாயகர் தனபாலின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தண்டையார்பேட்டை, திருவெற்றியூரில் சபாநாயகர் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கத்தில் சபாநாயகர் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் சபாநாயகர் தனபால் உருவபொம்மையை எரித்து 100க்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications