கருணாநிதிக்காக மொட்டை அடித்து அலகு குத்திய தொண்டர்.. வைரலாகும் போட்டோ!
திமுக தலைவர் கருணாநிதிக்காக தொண்டர் ஒருவர் மொட்டையடித்து அலகு குத்தி வலம் வரும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்காக தொண்டர் ஒருவர் மொட்டையடித்து அலகு குத்தி வலம் வரும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை கடந்த ஒரு வாரமாக மோசமடைந்துள்ளனது. முதலில் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நான்காவது நாளாக கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரவி வருகின்றன. இதனால் மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திமுகவினர் வழிபாடு
இந்நிலையில் பெரியார் கொள்கைகளை பின்பற்றும் திமுகவினர் கருணாநிதி நலம்பெற வேண்டி மொட்டை அடிப்பது, பூசணிக்காய் சுற்றுவது, விளக்குகளை ஏந்தி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது, தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனை செய்வது என ட்ராக் மாறி செல்கின்றனர்.

மூடத்தனங்களில் ஈடுபடாதீர்கள்
திமுகவினரின் இந்த செயல்களை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். திமுகவினர் பிரார்த்தனை போன்ற மூடத்தனங்களில் ஈடுபடக்கூடாது என திக தலைவர் கி வீரமணி நேற்று அறிக்கை விடுத்திருந்தார்.
|
அலகு குத்திய தொண்டர்
இந்நிலையில் இன்று திமுக தொண்டர் ஒருவர் கருணாநிதி நலம் பெறவேண்டி மொட்டையடித்து அலகு குத்தியுள்ளார். இந்த போட்டோ வைரலாகியுள்ளது.

அலகில் கட்சி கொடி
திமுக கரைவேட்டி கட்டி கரை துண்டை அணிந்தபடி உள்ள அந்த நபர் தனது சட்டையில் கருணாநிதி, ஸ்டாலின் உருவங்கள் பதிக்கப்பட்ட சட்டையை அணிந்துள்ளார். அலகின் இருபுறமும் கட்சியின் கொடியை கட்டி வலம் வருகிறார் அந்த விசுவாசி.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications