Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

24 மணிநேரத்திற்கு பிறகே சொல்ல முடியும்.. மருத்துவமனை அறிக்கையால் சோகத்தில் திமுக தொண்டர்கள்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதை தொடர்ந்து கலக்கமடைந்துள்ள தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதி உடல்நிலை பின்னடைவு... சோகத்தில் திமுக தொண்டர்கள்

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து திமுக தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

    கடந்த 27ஆம் தேதி நள்ளிரவு திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    தொடர்ந்து 10வது நாளாக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சியினர் பலரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

    நலிவு, முன்னேற்றம்

    நலிவு, முன்னேற்றம்

    அவ்வப்போது கருணாநிதியின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டு பின்னர் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கைகள் வெளியாகி வருகின்றன.

    மீண்டும் பரபரப்பு

    மீண்டும் பரபரப்பு

    ஆனால் கடந்த 6 நாட்களாக கருணாநிதியின் உடல்நிலை குறித்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. இந்நிலையில் காவேரி மருத்துவமனை இன்று மீண்டும் பரபரப்படைந்தது.

    குவிந்த குடும்பத்தினர்

    குவிந்த குடும்பத்தினர்

    கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உட்பட குடும்பத்தினர் பலரும் மருத்துவமனையில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.

    உடல்நிலையில் பின்னடைவு

    உடல்நிலையில் பின்னடைவு

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதியின் உடல்நிலையில் காலையில் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது தீவிர கண்காணிப்பில் உள்ளார். கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம் என்றார்.

    குவியும் தொண்டர்கள்

    குவியும் தொண்டர்கள்

    கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு என்ற அவரது பேட்டி திமுக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

    தொண்டர்கள் தவிப்பு

    தொண்டர்கள் தவிப்பு

    கருணாநிதியின் உடல்நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகததால் தொண்டர்கள் தவித்து வந்தனர். தலைவா எழுந்து வா என மருத்துவமனை முன்பு அவர்கள் மீண்டும் கோஷமிட்டு வந்தனர்.

    பின்னடைவு

    பின்னடைவு

    இந்நிலையில் காவேரி மருத்துவமனை கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    பெரும் சவாலாக உள்ளது

    பெரும் சவாலாக உள்ளது

    அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் வயது மூப்பு காரணமாக அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.

    முக்கியமான 24 மணி நேரம்

    முக்கியமான 24 மணி நேரம்

    24 மணிநேரத்தில் கருணாநிதியின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதை பொறுத்தே அவரது உடல்நிலையை கணிக்க முடியும் என மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொண்டர்கள் சோகம்

    தொண்டர்கள் சோகம்

    மருத்துவமனையின் இந்த அறிக்கையால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காவேரி மருத்துவமனைக்கு வெளியே திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சோகத்துடன் எழுந்து வா தலைவா என்று கோஷமிட்டபடி உள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+