டாக்டர்கள் என்ன சொன்னாலும் சரி, கருணாநிதி நிச்சயம் நலம் பெறுவார்: தொண்டர்கள் நம்பிக்கை
Recommended Video

சென்னை: கருணாநிதி விரைவில் நலம் பெறுவார் என்று திமுக தொண்டர்கள் நம்புகிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 28ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்றுடன் தொடர்ந்து 11வது நாளாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை 24 மணிநேரம் கழித்தே சொல்ல முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து திமுக தொண்டர்கள் கவலையும், பதட்டமும் அடைந்தனர்.
மருத்துவமனை முன்பு கூடிய தொண்டர்கள் பலர் கதறி அழத் துவங்கிவிட்டனர். தலைவர் நிச்சயம் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று தொண்டர்கள் நம்புகிறார்கள்.
நீ எழுந்து வா தலைவா என்று தொண்டர்கள் கோஷமிட்டதை காண முடிந்தது. நேரம் செல்ல செல்ல மருத்துவமனை பகுதியில் தொண்டர்களின் கூட்டம் அதிகரித்ததால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மருத்துவமனை என்ன சொன்னாலும் தலைவர் நிச்சயம் நலம் பெற்று வீடு திரும்புவார் என்கிறார்கள் தொண்டர்கள்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
குதிரை பேரமா? 2009 கலைஞர் பாலிடிக்ஸ்.. 2011ல் காப்பி அடித்த ஜெ.,! அப்படியே ஃபாலோ செய்யும் தவெக விஜய் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications