கருணாநிதியின் 91வது பிறந்தநாள்: திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்
நெல்லை: திமுக தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்தநாளை திமுகவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ராசிபுரத்தில் விவசாயிகள் அணி சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
ராசிபுரத்திலுள்ள அண்ணா சிலைக்கு திமுக விவசாயிகள் அணி மாநில அமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி. ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
பின்னர், மேரி கருணை இல்லத்துக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியும், ஆதரவற்ற முதியோருக்கு காலை உணவும் கே.பி.ராமலிங்கம் வழங்கினார்.
லட்டு கொடுத்த திமுகவினர்

திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளைமுன்னிட்டு நெல்லைவட்டத்தில் தென்காசி,செங்கோட்டை,பாவூர் சத்திரம் உள்ளிட்ட ஊர்களில் திமுகவினர் லட்டு வழங்கினர்.
அன்னதானம்

கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. திமுக இளைஞரணி சார்பில் ரத்ததானம் நடைபெற்றது.
தஞ்சையில் உற்சாகம்
திமுக தலைவர் கருணாநிதியின் 91 வது பிறந்தநாளை தஞ்சை மாவட்ட திமுகவினர் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்

கலைஞர் அறிவாலயம்
திமுக தஞ்சை மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயம் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலித்தது திமுக தஞ்சை மாவட்ட துணை செயலாளர் மீராஜெய்காந்த் தலைமையில் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பட்டாசு வெடித்த திமுகவினர்
இதைபோல் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை முன்பு தொமுச சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications