என்னதான் இருந்தாலும் சென்னை மேயரை தீர்மானிப்பது மு.க.ஸ்டாலின்தான்... இது திமுகவின் பெருமிதம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிரடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலை பார்த்த திமுக தொண்டர்கள் அடித்திருக்கும் ஒற்றைவரி கமெண்ட் 'என்னதான் இருந்தாலும் அதிமுகவில் சென்னை மேயராக யார் வர வேண்டும் என்பதைகூட எங்க தளபதி ஸ்டாலின்தான் தீர்மானிக்கிறாரே' என்பதுதான்.
உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17, 19-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்குகள் அக். 21-ந் தேதி எண்ணப்படுகின்றன.
இதில் 12 மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலரான முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதில் சென்னை மேயர் சைதை துரைசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.

பாலகங்கா, ஜேசிடி பிரபாகரன்
தற்போதைய வேட்பாளர் பட்டியலில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த பாலகங்கா அல்லது ஜேசிடி பிரபாகர் பிரபலமானவர்கள். சென்னையில் அதிக வார்டுகளில் அதிமுக வென்றால் இருவரில் ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்கலாம்.

அன்று சைதை துரைசாமி
இதில் எங்கேயப்பா ஸ்டாலின் வருகிறார் என்ற கேள்விதானே... திமுகவின் அதி அற்புத விளக்கம் இது.. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் வீழ்த்துவதற்கு வலிமையான நபராக ஜெயலலிதா தேர்வு செய்தது சைதை துரைசாமி. அவரால் ஸ்டாலினை வீழ்த்த முடியவில்லை. இருந்தபோதும் சைதை துரைசாமியை கவுரவிக்கும் வகையில் சென்னை மேயராக்கினார் ஜெயலலிதா.

ஜேசிடிபிரபாகர்
தற்போது முடிவடைந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை வீழ்த்த இம்முறை ஜேசிடி பிரபாகரனை களமிறக்கினார் ஜெயலலிதா. அவராலும் ஸ்டாலினை வீழ்த்த முடியவில்லை.

பிரபாகருக்கு வாய்ப்பு
இருந்தபோதும் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கியதாலே ஜேசிடி பிரபாகரனை மேயராக்க முடிவு செய்திருக்கிறார் ஜெயலலிதா... அதனால்தான் வேட்பாளராக்கியிருக்கிறார்..

தீர்மானிப்பது ஸ்டாலின்?
இப்படி ஸ்டாலினை எதிர்த்து தோற்கிறவர்கள்தான் மேயர் என்றால்... சென்னையின் மேயரை தீர்மானிப்பதே ஸ்டாலின்தானே.. என ஒரே போடாகப் போடுகின்றனர் திமுக உடன்பிறப்புகள்!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications