தலைவர்கள் வருகையால் பதற்றம்... கோபாலபுரத்தில் குவிந்த திமுக தொண்டர்கள்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை நலம் விசாரிக்க தலைவர்கள் கோபாலபுரத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை நலம் விசாரிக்க தலைவர்கள் கோபாலபுரத்துக்கு வருவதால் அங்கு தொண்டர்களும் குவிந்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்று ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் மருத்துவமனையில் தங்காமல் அவர் வீட்டில் இருந்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் தேறி வருவதாக காவேரி மருத்துவமனை அறிவித்தது.
இதையடுத்து இரவு ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து கமல், கே பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோரும் சென்று விசாரித்தனர்.
இதனால் கோபாலபுரமே பரபரப்பாகியுள்ளது. இதையடுத்து ஏராளமான தொண்டர்கள் கருணாநிதியின் வீடு முன்பு குவிந்துள்ளனர். அப்போது கருணாநிதி வாழ்க என கோஷமிட்டனர்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications