திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆய்வுக்கு வரும் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுகவினர்
திருவள்ளூருக்கு ஆய்வு செய்ய வரவுள்ள ஆளுநருக்கு எதிராக திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுகவினர் கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் கடந்த் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் தூய்மை இந்தியா திட்டப்பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறார்.

கோவை, வேலூர், தஞ்சை, கடலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆய்வு செய்யச் சென்ற போது அவருக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தின.
இந்நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், நவீன எரிவாயு தகனமேடை உள்ளிட்ட திட்டங்களையும், பழங்குடி மக்களுடன் கலந்தாய்வில் ஆளுநர் ஈடுபடவுள்ளார்.
அதற்காக திருவள்ளூர் செல்லும் ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பூவிருந்தவல்லியை அடுத்த குமணன்சாவடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கறுப்புக்கொடி காட்டியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications