மதுரையில் திரளும் உடன்பிறப்புகள்.. இன்று மாலை பிரமாண்ட கூட்டம்.. ஸ்டாலின் பேசுகிறார்!
மதுரை: மதுரையில் இன்று மாலை நடைபெறும் திமுக பொதுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தை பிரமாண்ட கூட்டமாக மாற்றுவதற்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மதுரையில் குவிந்து வருகின்றனர்.
ஜெயலலிதா பதவியேற்பையொட்டி தலைநகர் சென்னை.. தாய் நகரானது... அண்ணா சாலை அம்மா சாலையானது. சென்னையே அதிமுகவினரிடம் சிக்கி 2 நாட்கள் வதைபட்டுப் போனது.

இந்த நிலையில் தற்போது மதுரையை திமுகவினர் முற்றுகையிட்டுள்ளனர். மதுரை ஒத்தக்கடையில் பிரமாண்ட பொதுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தென் மாவட்ட அளவிலான பொதுக் கூட்டம் என்பதால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் குவிந்து வருகின்றனர்.
சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் மைதானம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு புதுமையான வடிவமைப்பில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்துகிறார். மைதானத்தின் இரு பக்கமும் அவரது பேச்சை தொண்டர்கள் சரியான முறையில் பார்த்துக் கேட்க வசதியாக எல்இடி திரைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல 8 இடங்களில் பிரமாண்டமான டி.வி.கள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருக்கிறது.
கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து வரும் மு.க.ஸ்டாலினை மதுரை விமான நிலையத்திலிருந்து கூட்டம் நடைபெறும் மைதானம் வரை கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரத்திற்கு வழி நெடுகிலும் போஸ்டர்கள், பேனர்களைக் குவித்து வைத்துள்ளனர் திமுகவினர்.
திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் இன்று காலை முதலே குவிய தொடங்கியுள்ளனர்.
மாநாடு குறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மூர்த்தி கூறுகையில், தென் மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட முறையில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை வருகிறார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து வழி நெடுக சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மு.க.ஸ்டாலின் 4 மணிக்கு பொதுக்கூட்ட மேடைக்கு வந்தடைகிறார். அங்கு சிறப்புரையாற்றுகிறார் என்றார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications