காவேரி மருத்துவமனைக்குள் செல்ல திமுக தொண்டர்கள் முயற்சி.. பின் வாசலை உடைக்க முயற்சி
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலிவடைந்து இருப்பதால், திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்து இருக்கிறார்கள்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலிவடைந்து இருப்பதால், திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்து இருக்கிறார்கள்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

மிகவும் தீவிரமாக அவருக்கு கடைசி நேர சிகிச்சை அளிக்கிறார்கள். கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் அவர் உடல்நிலை கவலைக்கிடமாகவும் நிலையற்றும் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதனால், திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்து இருக்கிறார்கள். பின் வாசலை உடைக்க முயற்சி செய்து வருகிறார்கள். பின்வாயில் வழியாக மருத்துவமனைக்குள் செல்ல முயற்சித்து வருகிறார்கள்.
இதனால் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications