ஆறு அங்க இருக்கு... கோவணத்தை இங்கயே அவிழ்த்துட்டான்: பொன்முடி பேச்சால் கடுப்பில் திமுக நிர்வாகிகள்!
விழுப்புரம்: திமுகவில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் புதிய மாவட்ட செயலாளர் பதவிக்கு பலரும் போட்டி போடுவதை மிகக் கடுமையாக விமர்சித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது அக்கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து அக்கட்சியில் மாவட்டங்கள் 65 ஆக பிரிக்கப்பட்டது. இதனால் குறுநில மன்னர்களாக கோலோச்சிக் கொண்டிருந்த மாவட்ட செயலாளர்கள் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 8-ந் தேதியன்று விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசியிருக்கிறார். அக்கூட்டத்தில் பொன்முடி பேசியதாவது:
மாவட்டத்தைப் பிரித்துவிட்டார்கள், நான் போய்விடுவேன் என்று நினைத்து மாவட்டச் செயலாளர் ஆகும் கனவோடு பலரும் அலைவதாகக் கேள்விப்பட்டேன்.
'ஆறு அங்க இருக்கு... கோவணத்தை இங்கயே அவிழ்த்துட்டான்' என்று சொல்வது மாதிரி, இப்பவே பதவியைப் பிடிக்க கோபாலபுரத்துக்கும் தளபதி (ஸ்டாலின்) வீட்டுக்கும் பெங்களூருக்கும் (கருணாநிதி மகள் செல்வி வீடு) பலரும் படையெடுப்பது எனக்குத் தெரியும்.
நான் எங்கேயும் போக மாட்டேன். இங்கதான் இருப்பேன். நான்தான் ஒன்றியச் செயலாளர் தேர்தலை நடத்தப்போறேன். அதனால எல்லாரும் அடக்கமா இருங்க...
இவ்வாறு பொன்முடி காட்டமாக பேசியிருப்பது அக்கட்சி நிர்வாகிகளை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளதாம். இதையும் புகாராக திமுக தலைமை கழகத்துக்கு கடிதமாக தட்டிவிட்டிருக்கின்றனர் உடன்பிறப்புகள்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications