ஸ்டாலின் செயல் தலைவரானது தமிழகத்துக்கே விடிவுகாலம்- திமுகவினர் அடேங்கப்பா!
திமுகவின் செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதால் தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறந்துள்ளதாக அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: பெரிதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட திமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று காலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கூடியது.
பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின், துரைமுருகன், டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். 4000த்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூடியிருக்க 16 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
ஜெயலலிதா, சோ, கோ.சி மணி உள்ளிட்ட மறைந்த முக்கிய தலைவர்களுக்கு திமுக பொதுக்குழுவில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

செயல்தலைவராக நியமனம்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வகிக்கும் பொருளாளர் என்ற பதவியோடு செயல்தலைவர் பதவியும் வகிப்பார் என்ற தீர்மானத்தை வாசித்தார் பொதுச்செயலாளர் அன்பழகன். அப்போது இறுக்கமான முகத்துடன் இருக்கையில் அமர்ந்திருந்தார் ஸ்டாலின்.

தொண்டர்கள் உற்சாகம்
ஸ்டாலின் எப்போது தலைவராவார் என்று காத்துக்கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் க.அன்பழகனின் அறிவிப்பை கேட்ட உடன் உற்சாமாக கரஒலி எழுப்பினர். சில விசில் சத்தங்கள் கூட கேட்டது. அரங்கிற்கு வெளியே இருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தனர்.

தமிழகத்திற்கு விடிவுகாலம்
தளபதியார் ஸ்டாலின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. இனி தமிழகத்திற்கே விடிவுகாலம் ஏற்பட்டு விடும் என்று ஒரு தொண்டர் உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.

பெண் தொண்டர்கள் மகிழ்ச்சி
இது ரொம்ப மகிழ்ச்சி, நாங்கள் எதிர்பார்த்ததுதான் தமிழகத்திற்கு இனிமே நல்லதாகவே நடக்கும். தலைவர் வழியில் தளபதி செயல்தலைவரானது எங்களுக்கு ரொம்ப சந்தோசம் என்று பெண் தொண்டர்கள் தெரிவித்தனர்.

கட்சி களைகட்டும்
ஸ்டாலின் செயல்தலைவர் ஆனதால் திமுகவில் தலைவர் வழிகாட்டுதலின் படி புது உற்சாகம் பிறந்துள்ளது. இது நாங்கள் எதிர்பார்த்ததுதான். இனி தொண்டர்கள் முன்பை விட உற்சாகமாக செயல்படுவார்கள் என்றும் தொண்டர்கள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications