காவிரி பிரச்னைக்காக மார்ச் 30ல் கூடுகிறது திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம்!
காவிரி பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக மார்ச் 30ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : காவிரி பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக திமுக தலைமை செயற்குழு கூட்டம் அவசரமாக கூடுகிறது. மார்ச் 30ம் தேதி செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி மார்ச் 29 வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுகிறதா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம் என்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஆனால் இதுவரை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த இசைவும் காட்டியதாக தெரியவில்லை. மாறாக காவிரி மேற்பார்வைக்குழுவை அமைப்பதிலேயே மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் மார்ச் 30ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம் கூட உள்ளதாக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்குழு உறுப்பினர்கள் இந்த அவசர கூட்டத்தில் தவறாமல் பங்குபெற வேண்டும் என்றும் பேராசிரியர் அன்பழகம் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் செயற்குழு கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார்












Click it and Unblock the Notifications