திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை 4.30 மணிக்கு 'ரிலீஸ்'- கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலின்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது. இதன்படி, திருவாரூரில் கருணாநிதியும், கொளத்தூரில் ஸ்டாலினும் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தமாதம் 16ம் தேதி நடைபெற இருக்கிறது. கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முடித்து விட்ட நிலையில், தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கடந்த ஞாயிறன்று திமுக தேர்தல் அறிக்கை வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலா 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் கட்சி 4 தொகுதிகளிலும், மக்கள் தே.மு.தி.க. 3 தொகுதிகளிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப்படை, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
எனவே, இது போக மீதமுள்ள 173 தொகுதிகளில் திமுக போட்டியிட இருக்கிறது. இன்று மாலை 4.30 மணியளவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இதில், திருவாரூரில் கருணாநிதியும், சென்னை கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இவர்கள் தவிர வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சில கட்சியின் மூத்த நிர்வாகிகளின் பெயர்களும், புதுமுகங்களும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகு மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட திமுக திட்டமிட்டுள்ளது. வரும் 23-ந் தேதி முதல் தனது சூறாவளி பிரசார சுற்றுப்பயணத்தை திமுக தலைவர் கருணாநிதி தொடங்குகிறார்.
இதேபோல் மு.க.ஸ்டாலினும், கவிஞர் கனிமொழியும் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
-
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications