வடசென்னையில் புதுமுகம் கிரிராஜன் எம்.ஏ., பி.எல். போட்டி: படித்தவருக்கு மதிப்பளித்த திமுக
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் வட சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கிரிராஜன் ஒரு வழக்கறிஞர் ஆவார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் பல புதுமுகங்கள் இடம்பெறுள்ளார்கள்.

இந்நிலையில் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் கிரிராஜனை பற்றி தெரிந்து கொள்வோமா?
எம்.ஏ., பி.எல். படித்துள்ள கிரிராஜன்(52) வழக்கறிஞராக பணியாற்றுகிறார். அவர் திமுக சட்டத் துறை இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். அவர் சென்னை மாநகராட்சி மன்ற கவுன்சிலராக இருந்தவர். அவர் தற்போது கொளத்தூரில் வசித்து வருகிறார்.
அவர் முதன்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். கொளத்தூர் சட்டசபை தொகுதியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற அரும்பாடுபட்டதால் கிரிராஜனுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
