சட்டசபைத் தேர்தல்: திமுக வேட்பாளர் நேர்காணல் இன்றுடன் நிறைவடைகிறது
சென்னை: திமுக வேட்பாளர் நேர்காணல் நேற்றுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் கடந்த மாதம் 22ம் தேதி முதல் நேர்காணல் நடந்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆர்.எஸ். பாரதி ஆகியோர் விருப்பமனு தந்தவர்களை தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்தினர்.

கடந்த 27ம் தேதி வரை முதல்கட்ட நேர்காணல் நடந்தது. 2ம் கட்ட நேர்காணல் இந்த மாதம் 2ம் தேதி தொடங்கியது. இறுதி நாளான நேற்று காலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னை தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று மாலை தொடர்ந்து நேர்காணல் நடந்தது. இந்நிலையில் திமுக நேர்காணல் இன்று ஒருநாள் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை 9 மணிக்கு சென்னை கிழக்கு மாவட்டத்துக்கான நேர்காணல் நடைபெறுகிறது. அத்துடன் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் திமுக நேர்காணல் முடிக்கப்பட்டுவிடும்.
இதுவரை 228 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்த 4000க்கும் மேற்பட்டவர்களிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று நடைபெறும் 6 தொகுதிகளுடன் திமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவு பெருகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி











Click it and Unblock the Notifications