70 வயதை கடந்த 6 பேருக்கு வாய்ப்பு கொடுத்த திமுக
சென்னை: திமுக அறிவித்துள்ள லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களில் 6 பேர் 70 வயதைக் கடந்தவர்கள். இவர்களில் இருவருக்கு 73 வயதில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் 35 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இவர்களில் 34 பேர் பட்டதாரிகள்.
மேலும் திமுக வேட்பாளர்களில் வழக்கறிஞர்கள் 13 பேர். டாக்டர்கள் 3 பேர். பொறியாளர் ஒருவர். முதுகலைப் பட்டதாரிகள் 8 பேர். இளநிலைப் பட்டதாரிகள் 7 பேர்.

மேலும் திமுக வேட்பாளர்கள் பட்டியலில் செ.உமாராணி (சேலம்), பவித்திரவள்ளி (ஈரோடு) ஆகிய 2 பெண்களுக்கு மட்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக அறிவித்துள்ள வேட்பாளர்களில் மிகவும் இளம் வயது வேட்பாளர் பவித்திரவள்ளி( வயது 26) ஆவார். அதே நேரத்தில் 70 வயதை கடந்த 6 பேருக்கு திமுகவில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.பாலு( வயது 72), பொன்.முத்துராமலிங்கம் (வயது 74), எஸ்.முகம்மது ஜலீல் (வயது 70), சி.தேவதாசசுந்தரம் (வயது 72), எம்.செந்தில்நாதன் (வயது 73), கொ.நந்தகோபாலகிருஷ்ணன் (வயது 73) ஆகிய 6 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் டி.ஆர்.பாலு, பொன்.முத்துராமலிங்கம் தவிர்த்து மற்ற 4 பேருக்கும் முதல் முறையாக தேர்தல் களத்தை எதிர்கொள்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications