திமுக ஆட்சியை பிடிக்கும்- நியூஸ்நேஷன், ஆக்ஸிஸ், ஏபிபி, சாணக்யா எக்ஸிட்போல்; அதிமுகதான்-சிவோட்டர்!!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகளில் 4 திமுகவுக்கு ஆதரவாகவும் 1 அதிமுகவுக்கு ஆதரவாகவும் வெளியாகி உள்ளன.
தமிழகத்தின் 232 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. கனத்த மழை பெய்தபோதும் சுமார் 70% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இன்று மாலை வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தம் 5 நிறுவனங்கள் வெளியிட்ட இந்த எக்ஸிட் போல் முடிவுகளில் திமுகவுக்கு 4; அதிமுகவுக்கு 1 ஆதரவாக இருக்கிறது.

நியூஸ்நேஷன்
நியூஸ்நேஷன் நடத்திய எக்ஸிட் போல் முடிவின் படி திமுக கூட்டணி 114 முதல் 118 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணி 95 முதல் 99 இடங்களில் வெல்லும்; தேமுதிக- மநகூ 14; பாஜக- 4 இடங்களிலும் இதர கட்சிகள் 9 தொகுதிகளிலும் வெல்லும் என்கிறது.

இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இண்டியா
இந்தியாடுடே- ஆக்சிஸ் மை இண்டியாவின் எக்ஸிட்போல் முடிவின்படி திமுக 124 முதல் 140 இடங்களையும் அதிமுக 89 முதல் 101 இடங்களையும் கைப்பற்றும். பாஜகவுக்கு 3; பிற கட்சிகளுக்கு 4 முதல் 8 இடங்கள் கிடைக்கும்.

ஏபிபி
ஏபிபி நியூஸ் எக்ஸிட்போல் முடிவுகளின் படி திமுக கூட்டணி 132 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும்; அதிமுக கூட்டணிக்கு 95 இடங்களும் பாஜகவுக்கு 1 தொகுதியும்தான் கிடைக்கும். இதர கட்சிகளுக்கு ஒரு இடமும் கிடைக்காது.

சாணக்யா
டைம்ஸ்நவ்- சாணக்யா வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவின்படி திமுக 140 தொகுதிகளிலும் அதிமுக 90 இடங்களிலும் வெல்லும்; பிற கட்சிகளுக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்கிறது.
இந்த 4 எக்ஸிட் போல் முடிவுகளில் திமுக கூட்டணி மிக அதிகமாக 140 இடங்களைக் கைப்பற்றும் என டைம்ஸ் நவ்- சாணக்யா மட்டும் கூறியுள்ளது.

சிவோட்டர்
ஆனால் சிவோட்டர் எக்ஸிட்போல் முடிவுகளோ அதிமுக கூட்டணி 139 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைக்கும்; திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு 78 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது. இதர கட்சிகள் 17 இடங்களிலும் பாஜகவுக்கு ஒரு இடமும் கிடைக்காது என்கிறது சிவோட்டர்.
இன்று வெளியான 5 எக்ஸிட் போல் முடிவுகளில் நியூஸ்நேஷன், இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இண்டியா, ஏபிபி நியூஸ், சாணக்யா ஆகிய 4-ம் திமுக ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் சிவோட்டர்ஸ் ஒன்று மட்டும் அதிமுகவே ஆட்சியை தக்க வைக்கும் எனவும் கூறியுள்ளன.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications