திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டம்... திருவாரூரில் கோலாகலமாக தொடங்கியது
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் கொண்டாட்டம் தற்போது திருவாரூரில் நடந்து வருகிறது.
திருவாரூர்: திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் கொண்டாட்ட விழா தற்போது திருவாரூரில் நடந்து வருகிறது.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் ஜூன் 3-ம் தேதி வருகிறது. இவர் நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார். இந்த பிறந்த நாளை கொண்டாட திமுக தொண்டர்கள் ஒருவாரம் முன்பே தயாராகிவிட்டனர். எப்போதும் போல இந்த முறையும் கோலாகலமாக விழாவை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

இந்த முறை திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா திருவாரூரில் நடக்கிறது. இந்த விழா தற்போது தொடங்கியுள்ளது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார்.
உடல்நிலை காரணமாக கருணாநிதி விழாவில் கலந்து கொள்ளவில்லை. மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் விழாவில் முன்னிலை வகிக்கிறார்கள். இந்த விழாவில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தொண்டர்கள் திருவாரூர் வந்துள்ளனர்.
கி.வீரமணி, திருநாவுக்கரசர், வைகோ, காதர் மொய்தீன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் திமுகவின் தோழமை கட்சியின் தொண்டர்களும் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
கி.வீரமணி தொடங்கி வரிசையாக எல்லா தலைவர்களும் கருணாநிதி குறித்தும், அவருடன் பழகிய அரசியல் அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். இன்னும் பல தலைவர்கள் இந்த விழாவில் பேச உள்ளனர். பிறந்த நாள் முடியும் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக இப்படி விழா நடத்த உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications