வைர விழா மலர்.. சுடச் சுட பார்த்து ரசித்த கருணாநிதி.. சூப்பர் வீடியோ!!
திமுக தலைவர் கருணாநிதி தனது வைரவிழா மலரை பார்வையிடும் வீடியோ வெளியாகியுள்ளது.
சென்னை : திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தனது வைரவிழா மலரை பார்க்கும் காட்சி வீடியோவாக பதிவு செய்து வெளியிடப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி நாளை தனது 94வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டியும் சட்டப்பேரவையில் அவர் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாகவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் வைரவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி, நித்திஷ்குமார், லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை வர உள்ளனர்.

ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக கருணாநிதி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிறந்தநாளின் போது அவரை சந்திக்க நேரில் வர வேண்டாம் என்றும் திமுகவினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
என்னதான் கருணாநிதியின் பழைய புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து ரசித்தாலும் அவரை நேரில் பார்த்து ஆசி பெறமுடியவில்லையே என்று கட்சித் தொண்டர்கள் ஏக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் வைரவிழா மலரை அவரே பார்த்து திருத்தம் சொல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி தனி உதவியாளர் சண்முகநாதன் உள்ளிட்டோர் விழா மலரை காண்பிக்க அதன் விவரத்தை கருணாநிதி கேட்டும் வீடியோ காட்சி தொண்டர்களுக்கு புத்துயிர் பாய்ச்சியுள்ளது. நாளை வைரவிழா கொண்டாடும் நாயகனின் வீடியோவை நீங்களும் பாருங்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications