"வலைஞர்"களின் வாழ்த்து மழையில் "கலைஞர்".... டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். பிறந்தநாளை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள #HBDkalaingar என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 91 வயது முடிந்து 92-வது வயது பிறக்கிறது. அவரது பிறந்தநாளையொட்டி கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கருத்தரங்கம், கவியரங்கம், ஏழைகளுக்கு உதவிப் பொருள்கள் வழங்குதல், விளையாட்டுப் போட்டிகள், மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை திமுகவினர் நடத்தி வருகின்றனர்.

இணையதளம், சமூக வலைதளங்கள் மூலம் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. www.kalaignarkarunanidhi.com என்ற கருணாநிதியின் பிரத்யேக இணையதளம் மூலமும், 54242 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கலாம்.

இதுதவிர முகநூல், ட்விட்டர், கூகுள் பிளஸ் போன்ற சமூக ஊடகங்களில் #kalaignar92, #HBDMK, #கலைஞர் 92 ஆகிய ஹாஸ்டாக் மூலம் வாழ்த்து தெரிவிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருணாநிதி நம்பர் 1

இன்று காலை முதலே ஏராளமானோர் தங்களின் வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டனர். இதனையொட்டி டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தார் கருணாநிதி.

கோபாலபுரத்து சூரியன்

திமுகவினர் மட்டுமல்ல பொதுஜன டிவிட்டர்வாசிகளும் தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதிகாலை ஆதவன் 5 மணிக்கு விழிக்கும்.. கோபாலபுரத்தில்சூரியன் அதற்கு முன்னே விழித்துவிடுகிறது என்று வைரமுத்துவின் வரிகளை கூறி வாழ்த்தியுள்ளார் ஒருவர்.

அயராத உழைப்பு

இத்துனை வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாய்.இவ்வளவு வேலைகளை செய்யும் சக மனிதனாய் உங்களை எனக்கு பிடிக்கும். வாழ்க!!! என்று வாழ்த்தியுள்ளார் ஒரு வலைஞர்.

தளராத தன்னம்பிக்கை

எத்தனை முறை கடலில் தூக்கிபோட்டாலும் கட்டுமரமாய் மிதந்து மீண்டும் முதலமைச்சர் அரியணையில் அமரும் தளராத தன்னம்பிக்கை என்பது ஒரு வலைஞரின் வாழ்த்தாகும்.

தமிழ் உள்ளவரை

எம் தமிழ்மொழி வாழும் இறுதிமூச்சு வரை தலைவா உம் பெயரும் புகழும் வாழ்ந்திருக்கும் என்பது ஒரு ட்விட்டர்வாசியின் வாழ்த்தாகும்.

சோழநாட்டுச் சூரியனே...

சோழநாட்டுச் சூரியனே...

திருக்குவளை தந்த திருமகனே... சோழநாட்டு சூரியனே என்றும் வாழ்த்திய வலைஞர்கள் பல்வேறு சிறப்புக்களை கூறி வாழ்த்தியுள்ளார்.

தோல்வியடையாத கருணாநிதி

இந்தியாவிலேயே எம்.எல்.ஏ பதவிக்கு போட்டியிட்டு ஒரு முறை கூட தோற்காத கருணாநிதியை குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளனர்.

நோ லீவ்

சன்னுக்கு ஏது சன் டே என்பது வலைஞரின் வாழ்த்து. தமிழுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் வாழ்த்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+