கருணாநிதிக்கு இன்று 94-வது பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்.. உற்சாகத்தில் திமுகவினர்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தார். இளம் வயது முதல் பொது வாழ்வில் அவர் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு இன்று 93 வயது முடிந்து 94-வது வயது பிறக்கிறது. இதனையொட்டியும் சட்டப்பேரவையில் அவர் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாகவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் வைரவிழா கொண்டாட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத், கேரள ஆளுநர் சதாசிவம் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விசிக தலைவர் தொல். திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அண்ணா, பெரியார் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கருணாநிதி அதன் பின்னர் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களிடம் வாழ்த்து பெறுவார். ஆனால் இந்தாண்டு உடல்நலக்குறைவு காரணமாக தொண்டர்கள் அவரை சந்திக்க நேரில் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வைரவிழா நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு திமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications