திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது.. புதுவை முதல்வர் நாராயணசாமி
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
டெல்லியில் இருந்து புதுவை வந்த முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சினையில் தமிழகம், கர்நாடக, புதுவை ஆகிய மாநிலங்களின் வாதத்தை கேட்டுள்ளது. மத்திய தொழில்நுட்ப குழு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையை பரிசீலினை செய்த பிறகு தமிழகத்துக்கு வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடகா மாநிலம் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காதது வருத்தமளிக்கிறது. காவிரி பிரச்சினை பற்றி பேச பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு உள்ளேன். பதில் இன்னும் வரவில்லை. ஜனாதிபதியை சந்தித்து காவிரி பிரச்சினையில் தலையிட்டு தமிழகம், புதுவைக்கு இடைகாலத்தில் வழங்க வேண்டிய தண்ணீரையும் நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரிக்கை வைத்து உள்ளேன். இது சம்பந்தமாக அரசிடம் பேசுவதாக அவர் கூறி உள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது. நாங்கள் ஒருமித்த கருத்தோடுதான் செயல்படுகிறோம். தேர்தல் பிரசாரத்துக்கு ஏற்கனவே திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளேன். அவரும் வருவதாக கூறியுள்ளார். மனு தாக்கல் செய்வதற்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் சந்திக்க உள்ளேன். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications