திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வலுவானது...சொல்கிறார் பழ.கருப்பையா

Subscribe to Oneindia Tamil

மதுரை: என்னை பொறுத்தவரை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிதான் வலுவானது நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. ஆனாலும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிதான் எனக்கு வலுவான கூட்டணியாக தெரிகிறது என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா கூறியுள்ளார்.

மதுரையில் பாரதி தேசிய பேரவை சார்பில் மகாகவி பாரதி சிந்தனை கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கலந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

 DMK - Congress alliance is stronger says Pala. Karuppiah

வலுவான கூட்டணி என்பது என்னை பொறுத்தவரை தே.மு.தி.க. உள்பட சில கட்சிகள், அ.தி.மு.க- தி.மு.க. ஆகிய கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் ஒழித்துவிடலாம் என சொல்லிக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் ஒருவரை தான் ஒழிப்பீர்கள். இன்னொருவரை ஒழிக்க மாட்டீர்கள். மாறாக வளர்ப்பீர்கள்.

கருணாநிதியை தோற்கடித்து ஜெயலலிதாவை வெற்றி பெற செய்வதால் இவர்களுக்கு என்ன பயன் இருக்கிறது. அதிரடி நடவடிக்கையாக பல அமைச்சர்கள் நீக்கப்படுவதும், சேர்க்கப்படுவதும் அ.தி.மு.க.வில் வாடிக்கை. மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் சேர்த்துக் கொள்வார்கள். நான் ஒருவன்தான் ராஜினாமா கடிதம் கொடுத்தவன்.

கட்சியில் இருந்து ஒருவர் நீக்கப்பட்டதற்கும், சேர்க்கப்பட்டதற்கும் என்ன காரணம் என்று சொல்லமாட்டார்கள். சென்னையில் வந்த வெள்ளம் மழையால் மட்டும் அல்ல. நிர்வாக திறமையின்மைதான் காரணம்.

தர்மபுரியில் 3 இளம்பெண்கள் கொல்லப்பட்டார்கள். கீழ்கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. உயர்நீதிமன்றம் அதை உறுதிப்படுத்தியது. ஆனால் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. நீதிமன்ற தீர்ப்பில், ‘‘இவர்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லை. எதோ ஒரு ஆவேசத்தில் செய்தார்கள். இறந்து விட்டார்கள். ஆகவே தண்டனை குறைக்கப்பட்டதாக நீதிமன்றம் காரணம் கூறுகிறது.''

நான் சொல்கிறேன், தீவைத்து கொளுத்தியவர்களின் நோக்கம் மிகவும் மோசமான நோக்கமாகும். தற்போது தேர்தல் கமிஷன் நடவடிக்கை என்பது போகிற, வருகிறவர்களின் டவுசர் பையில் பணம் இருந்தால் எடுத்துக் கொள்கிறார்கள். வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க போலீஸ் வண்டியை பயன்படுத்தினால் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பழ.கருப்பையா கூறினார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+