ஜவடேகர் மீண்டும் தமிழகம் வருவதற்குள் திமுக-காங்.-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும்: குஷ்பு நம்பிக்கை
சென்னை: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் அடுத்த வாரம் தமிழகம் வருவதற்குள் திமுக-காங்கிரஸ்-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, பிரச்சாரம் என மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது.

அதேபோல் மதிமுக-விடுதலை சிறுத்தைகள்- கம்யூனிஸ்டுகள் இணைந்து மக்கள் நல கூட்டணி இயக்கமாக உருவாகியுள்ளது. அந்த கூட்டணியினர் 2 கட்ட பிரச்சாரத்தையும் முடித்துவிட்டனர். நாம் தமிழர் கட்சியும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
மற்ற கட்சிகள் தங்களது நிலைபாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. அந்த வகையில் தேமுதிக எந்த கட்சியோடு கூட்டணி சேருவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க முடியாத குழப்பத்தில் திணறி வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு அக்கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் அடுத்த வாரம் தமிழகம் வருவதற்குள் திமுக-காங்கிரஸ்-தேமுதிக கூட்டணி உறுதியாகிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications