சட்டசபை தேர்தல்: சென்னையில் திமுக 13 - காங்கிரஸ் 3 தொகுதிகளில் போட்டி?
சென்னை: சென்னையில் சைதாப்பேட்டை உட்பட 13 தொகுதிகளில் திமுகவும் மயிலாப்பூர் உட்பட 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நால்வர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இன்னமும் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை குழுவை அமைக்கவில்லை. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மொத்தமுளள 234 தொகுதிகளில் தி.மு.க. 190 தொகுதி வரை போட்டியிட திட்டமிட்டுள்ளது. காங்கிரஸுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
இந்நிலையில் சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் திமுக 13 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, கொளத்தூர், வில்லிவாக்கம், ராயபுரம், ஆர்கே நகர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், துறைமுகம், எழும்பூர், பெரம்பூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளில் திமுகவும்
மயிலாப்பூர், திருவிக நகர், வேளச்சேரி தொகுதிகளில் காங்கிரஸும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருகாலத்தில் திமுகவின் கோட்டையாக இருந்தது சென்னை. ஆனால் கடந்த சில தேர்தல்களில் அதிமுகவின் கோட்டையாக சென்னை மாவட்டம் மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications