சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் மீது அதிமுகவினர் தாக்குதல் - சாலை மறியல்
சேலம்: சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆதரவான தீர்மானத்தை எதிர்த்து பேசியதால் திமுக கவுன்சிலர் தெய்வலிங்கம் மீது அதிமுக கவுன்சிலர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்திற்கு மேயர் சவுண்டப்பன் தலைமை வகிக்க, ஆணையாளர் செல்வராஜ் வரவேற்றார். கூட்டம் தொடங்கியதும் மேயர் சவுண்டப்பன், அதிமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த அவசர தீர்மானத்தை வாசித்தார். அப்போது அவர், ‘அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் 5-வது முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு சேலம் மாநகராட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்' என்றார்.
இதனைக் கேட்டு அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். இதை திமுக கவுன்சிலர் தெய்வலிங்கம் கண்டித்துள்ளார். ‘10 நிமிடங்கள் கை தட்டினால், மக்கள் பிரச்சினைகளை எப்போது பேசுவது?' என அவர் கேள்வி எழுப்பினார்.
இதில் கோபம் அடைந்த அதிமுக கவுன்சிலர்கள் தெய்வலிங்கத்தை திட்டியுள்ளனர். பதிலுக்கு தெய்வலிங்கமும் அவர்களைத் திட்டியுள்ளார். ஆவேசமடைந்த அதிமுக கவுன்சிலர்கள் மாரியப்பன், பாமாகண்ணன், ஜமுனாராணி ஆகியோர் தெய்வலிங்கம் அருகில் வந்து, ‘ஏன் இப்படி பேசுகிறீர்கள். 5-வது முறையாக அ.தி.மு.க. பொது செயலாளர் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். நாங்கள் சந்தோஷத்தில் மேஜையை தட்டுகிறோம். நீங்கள் பேசாமல் அமருங்கள்' எனக் கூறியுள்ளனர்.
இதனால் இரண்டு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் தெய்வலிங்கம் தாக்கப்பட்டார். பின்னர் பாமாகண்ணன், மாரியப்பன், ஜமுனா ராணியும் தாக்கப்பட்டனர். இதனால் மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், தெய்வலிங்கத்தை மன்ற கூடத்தை விட்டு வெளியேறுமாறு அதிமுக கவுன்சிலர்கள் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு அவர் மறுக்கவே, தெய்வலிங்கத்தை தாக்கியபடியே இழுத்துச் சென்று வெளியே தள்ளியுள்ளனர் சிலர்.
இதனால் கோபம் அடைந்த திமுக மாநகராட்சி எதிர்கட்சி தலைவி புவனேஸ்வரி முரளி, மாதையன், சரளாகுணசேகரன் மற்றும் சிலர் அதிமுகவினருடன் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் மன்றக் கூடம் முன்பு நின்று கோஷமிட்டனர்.
இதற்கிடையே, தெய்வலிங்கத்தின் உறவினர்கள் சிலர் மன்ற கூடத்திற்குள் புகுந்து மேயர் சவுண்டப்பனைத் திட்டியுள்ளனர். தெய்வலிங்கத்தை வேண்டுமென்றே அதிமுக கவுன்சிலர்கள் தாக்கியதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், தெய்வலிங்கத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் அவர்களைச் சமாதானம் செய்து அதிகாரிகள் வெளியே அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் மற்றும் தெய்வலிங்கத்தின் உறவினர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இந்தச் சம்பவங்களால் சேலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications