தமாகாவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுகதான் முடிவெடுக்கும்: திருநாவுக்கரசர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுகதான் முடிவெடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நெறியாளர் குணசேகரனுக்கு அளித்த பேட்டியில் திருநாவுக்கரசர் கூறியதாவது:

DMK to decide on TMC

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். சில இடங்களில் உடன்பாடு ஏற்படவில்லை. இது தொடர்பாக மீண்டும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸுக்கு போதுமான இடங்கள் ஒதுக்கப்படாததால் விலகிச் செல்வதாக கூறப்படுவதெல்லாம் உங்கள் யூகம். ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு வர உள்ளதால் உத்தரப்பிரதேச தேர்தலை முன்வைத்து திமுகவிடம் இருந்து காங்கிரஸ் விலகுகிறது என்பதெல்லாம் யூகங்களே.

எந்த ஒரு கூட்டணியுமே நிலையானது இல்லை என்ற என்னுடைய கருத்தில் உள்நோக்கம் எதுவும் இல்லை. இந்தியா முழுவதும் எந்த ஒரு கூட்டணியும் நீடித்ததாக இருந்தது இல்லை. கடந்த காலங்களில் அதிமுகவுடனும் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கிறது...

திமுக கூட்டனியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெறுவது குறித்து அக்கட்சிதான் முடிவெடுக்கும். தமாகாவை கூட்டணியில் சேர்ப்பதில் காங்கிரஸுக்கு ஆட்சேபனை இல்லை எனக் கூற முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+